தமிழிசை ஆய்வில் சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூல் ஒரு மைல்கல்.



தமிழிசை ஆய்வில் சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூல் ஒரு மைல்கல்.

தமிழ்நாட்டில் இருந்து கல்கத்தா சென்று இராமகிருஷ்ண மடத்தில் கல்விகற்று,
ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர்களைக் குருநாதராகக் கொண்டு
துறவறம் ஏற்று வாழ்ந்தார் இருவர் முக்கியமானவர்கள்: சுவாமி சித்பவானந்தர், சுவாமி விபுலானந்தர்
பூர்வாசிரமத்தில் எனக்கு உறவினர் சித்பவானந்தர். பல கல்விநிலையங்களைத்
தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர். நான் பிறப்பதற்கு முன்பு, எங்கள் தோட்டங்களுக்கு
சுவாமி விபுலானந்தர் வருகைதந்துள்ளார் என்றும், திருப்பராய்த்துறை தபோவனத்திலும்,
தி. சு. அவினாசிலிங்கம் ஐயாவின் இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் சுவாமி
விபுலானந்தர் பலநாட்கள் தமிழகம் வரும்போது தங்கியிருப்பார் என்றும்
பேரா. கு. அருணாசலக் கவுண்டர், கவிஞர் கம்பராமன் போன்ற பெரியோர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

இலங்கை தந்த அரிய தமிழ்ப் பேராசிரியர், இந்து சமயம் என்றும் ஈழத்தீவினில்
நிலைத்திருக்க இராமகிருஷ்ண மடமும், அது சார்ந்த கல்விநிலையங்களும் உருவாக்கிய
சுவாமி விபுலானந்தரின் பொற்பாதங்கள் எம் தலைமேலன.

டொராண்டோ வாழ் தமிழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

ஆவணப் படம் உருவாக்கிய முனைவர் மு. இளங்கோவன்,
தொல்காப்பியம் ஓர் அறிமுகம் - வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்
https://www.youtube.com/watch?v=fio5J0X5nlw&
கேட்டு மகிழ்க!

இவ்விழா முடிந்தபின்னர், மு. இளங்கோவன் இலண்டன் விரைகிறார்.
இங்கிலாந்தில் முதன்முறையாக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.
லிவர்பூல் மாநகரில் உள்ள ஹோப் யுனிவெர்ஸிட்டியில் நடைபெறுகிறது.
அதில் தொல்காப்பியமும், திருக்குறளும் என்பதான உரையை மு. இளங்கோ நிகழ்த்துகிறார்.
எனது “திருக்குறளில் அன்னப் பறவை” (’புள் பறந்தற்றே’ என்னும் குறளில் வரும் புள்
அன்னம்/ஹம்சத்தைக் குறிக்கும் என்பதான ஆய்வுக்கட்டுரை)  இம்மாநாட்டின்கண் இடம்பெறுகிறது.

விபுலானந்தர் ஆவணப் படம் போன்ற முயற்சிகளைத் தமிழர்கள் ஆதரிப்பராக!

அன்புடன்,
நா. கணேசன்
https://archive.org/details/@dr_n_ganesan
http://nganesan.blogspot.com

கருத்துகள்