வெல்லும் சொல்! கவிஞர் இரா. இரவி

வெல்லும் சொல்!
கவிஞர் இரா. இரவி
வெல்லும் சொல்லை எப்போதும் பயன்படுத்துங்கள்
வெல்வார்கள் சாதிப்பார்கள் வளரும் குழந்தைகள் !

அவச்சொல் என்றும் எப்போதும் சொல்லாதீர்கள்
அதிர்வலைகளை ஏற்படுத்தும் தோல்வியில் வீழ்த்தும் !

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்
என்பது பொன்மொழி மட்டுமல்ல உண்மையாகும்!

மனதார வாழ்த்துங்கள் மற்றவரைப் பாராட்டுங்கள்
மனதில் நல்லதை மட்டுமே எப்போதும் நினையுங்கள்!

எதிர்மறை எண்ணமும் சொல்லும் வேண்டாம்
எதிலும் உடன்பாட்டுச் சிந்தனையே இருக்கட்டும் !

உன்னால் முடியாது என ஒருபோதும் சொல்லாதீர்கள்
உன்னால் முடியுமென்று உடன் ஊக்கப்படுத்துங்கள் !

உருப்பட மாட்டாய் என்று உச்சரித்தல் கூடாது
உருப்பட வழி சொல்லி பயிற்றுவியுங்கள் !

எதற்கும் இலாயக்கு இல்லை என்று என்றும்
யாரையும் திட்டுடல் கூடவே கூடாது !

முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை
முயற்சி செய்திட ஊக்கம் தாருங்கள்!

வளமாக வருவாயென வாயார வாழ்த்துங்கள்
வையகம் போற்றும் வண்ணம் சிறப்பார்கள் !

நல்ல சொற்கள் நல்ல அதிர்வை உண்டாக்கும் 
நல்ல பலன் தரும் அறிவியல் உண்மையாகும் !

எண்ணம் சொல் செயல்  நல்லதாக இருக்கட்டும் !
எண்ணியது எண்ணியபடி இனிதே நடக்கும்!

கோபம் வந்தாலும் யாருக்கும் சாபம் தராதீர்கள் !
கோபம் தணித்து என்றும் இன்சொல் பேசுங்கள்!

சிந்திய பொருளை உடன் அள்ளி விடலாம்
சொல்லிய சொல்லைத் திரும்பப் பெற முடியாது!

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று வள்ளுவன் வாக்கு
கட்டாயம் அனைவரும் கடைபிடித்தல் சிறப்பு !

ஊக்கச் சொல்லால் உயர்ந்தோர் பலர்
உதடு உச்சரிப்பதில் செல்வல்ல வரவு தான்!



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !






கருத்துகள்