குரங்கு அப்பம் பங்கு
வைத்த கதையாக
நீட் தேர்வு !
நீ அரிசி கொண்டு வா ! நான் உமி தாரேன் !
ஊதி ஊதி தின்னலாம்
நீட் தேர்வு !
கோடிகள் கொள்ளையடித்தவன்களை
வெளிநாட்டிற்கு வழியனுப்பி விட்டு
நீட் எழுதும் மாணவிகளை சோதனை !
எரியும் தீயில் ஊற்றினர் பெட்ரோல்
வட இந்தியாவில்
நீட் தேர்வு !
திறமையால் எடுத்த மதிப்பெண்ணையும்
மதிப்பிழக்க வைத்தது
நீட் தேர்வு !
கிராமத்து மாணவர்களின்
தடைக்கல்
நீட் தேர்வு !
பணக்காரர்களுக்கு
மருத்துவ இருக்கை
நீட் தேர்வு !
புத்தியுள்ளோர்
செய்திட்ட சதி
நீட் தேர்வு !
மேட்டுக்குடிக்கு
மருத்துவ இருக்கை
நீட் தேர்வு !
சாமானியர்களுக்கு
வைத்த ஆப்பு
நீட் தேர்வு !
துப்பட்டா கூடாதாம்
துப்பட்டா உம்மை
நீட் தேர்வு !
கடும் சோதனை
கடும் வேதனை
நீட் தேர்வு !
கடும் சோதனை
கடும் வேதனை
நீட் தேர்வு !
ஏழை எளியோரின்
மருத்துவக்கனவு தகர்த்தது
நீட் தேர்வு !
பசுத்தோல் போர்த்திய
புலி
நீட் தேர்வு !
கொள்ளையன்களை விட்டுவிட்டு
நல்லவர்களிடம் சோதனை
நீட் தேர்வு !
எளியோரைத் தடுக்கும்
ஏமாற்று வேலை
நீட் தேர்வு !
வலியோரை வளர்க்கும்
வஞ்சக வேலை
நீட் தேர்வு !
அன்று அனிதா
இன்று ரமேசு என்ற கிருட்டிணசாமி
நீட் தேர்வு பலி !
கருத்துகள்
கருத்துரையிடுக