என்ன கொடுமையடா ! கவிஞர் இரா .இரவி !

என்ன கொடுமையடா ! கவிஞர் இரா .இரவி ! 

ஆபத்தான அணு உலைகள் கூடங்குளத்தில் 
ஒன்று இரண்டு மட்டுமல்ல 
மூன்று நான்கு உலைகள் வைக்க 
தமிழகத்தில் இடமுண்டு !

நியூட்ரினோ என்ற பெயரில் 
மலையை உடைக்க 
தேனியில் தமிழகத்தில் இடமுண்டு !

நிலத்தை மலடாக்கும் 
மீத்தேன் எரிவாயு  எடுக்க  
தமிழகத்தில் இடமுண்டு !

மாசு  கக்கி நோய் பரப்பும் 
ஸ்டெர்லைட் ஆலைக்கும்
தமிழகத்தில் இடமுண்டு !

சுற்றுச்சூழலை மாசாக்கும் 
இராணுவத்திற்கான ஆயுதங்கள் தயாரிக்க 
தமிழகத்தில் இடமுண்டு ! 

தமிழக   மாணவர்கள்  நீட் தேர்வு எழுத 
தமிழகத்தில் இடமில்லையாம் !

என்ன கொடுமையடா !

கருத்துகள்