ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பார்த்தோம் திரையில்
பார்க்கிறோம் நேரில்
ஒரு நாள் முதல்வர் !
மணி முடிக்கான போட்டியில்
மாய்ந்து விடுகின்றன
நீதி நியாயம் !
இயற்கை மகுடம்
உழைப்பாளிக்கு
வியர்வைத் துளி !
மணி முடிக்கான போட்டியில்
மாய்ந்து விடுகின்றன
நீதி நியாயம் !
அழியாது
கல்வெட்டென
அகஅழகு !
குறித்து வைக்காததால்
மறந்து போனது
நல்ல ஹைக்கூ !
வசம் இல்லை
வனப்பு உண்டு
செயற்கை மலர் !
இல்லை
அம்பு
வானவில் !
கருத்துகள்
கருத்துரையிடுக