ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !

காளை கூட சினை என்றால் தீண்டுவதில்லை
சிறு பிள்ளையைத்  தீண்டிய கயவர்கள்
விலங்கிலும் கீழ் !

நெஞ்சு பொறுக்கவில்லை
கொதிக்கிறது நெஞ்சம்
கொல்லுங்கள கொடூரன்களை !

காம வெறி பிடித்த கொடூரன்களை
காவு கொடுக்க வேண்டும்
கோயில் வாசலில் !

காம வெறி பிடித்த கொடூரன்களை
காவு கொடுக்க வேண்டும்
கோயில் வாசலில் !

மனித வடிவில் மிருகங்கள்
வாழ்கின்றன கோயிலில்
கவனம் பெண்களே !

ஆலயத்தில் உள்ளோர்
மெய்ப்பித்துள்ளனர்
கடவுள் இல்லை என்பதை !

காட்டுமிராண்டிகள் திருந்திவிட்டனர்
நாட்டுமிராண்டிகள் கெட்டு விட்டனர்
கொடியோரின் ஆணுறுப்பை அகற்றுங்கள் !

பிஞ்சின் உயிர் பிரித்த
வஞ்சகரின் உயிர் பறிப்பதே
உன்னத தீர்ப்பாகும் !


பாலியல் கொடுமை கொடூரம்
இதற்குப்பின்னும் நம்பலாமா ?
கடவுள் உண்டு என்பதை !

மனித வடிவில் மிருகங்கள்
வாழ்கின்றன கோயிலில்
கவனம் பெண்களே !

கருத்துகள்