மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் !   கவிஞர் இரா .இரவி !

என்னுடைய 18 வது நூலான " கவிச்சுவை " அச்சுப்பணி ஆரம்பமானது  .தினமணி கவிதைமணி  இணையம் தரும் தலைப்பிற்கு வாரா வாரம் எழுதிய கவிதைகளும்,
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் அவர்கள் கவியரங்கிற்கு மாதா மாதம் தரும் தலைப்பிற்கு எழுதிய  கவிதைகளும் ,
சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளும் தொகுத்து நூலாக வர உள்ளது.
புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வர உள்ளது .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள்,
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு 
இ .ஆ .ப.அவர்கள் ,
கவிஞர் முனைவர் கோவிந்தராஜூ அவர்கள்
ஆகியோரின் அணிந்துரையுடன் வெளி வர உள்ளது .கருத்துகள்