ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


வித்தைக்காட்டி வசமாக்கி 
அடிக்கின்றனர் கொள்ளை 
சாமியார்கள் !

வீட்டிற்குள் இருந்தால் 
விவகாரம் இல்லை 
மதம் !

மெய்ப்பித்து வருகின்றனர் 
லெனின்  கூற்றை    
மதவாதிகள் !
   
இருப்பதாகத் தெரியவில்லை 
சிலர்க்கு 
ஆறாவது அறிவு !

துருப்பிடித்தது
பயன்படுத்தாமல் 
பகுத்தறிவு !

மதத்தை மற
மனிதனை நினை  
மலரும்  மனிதநேயம் !

உன் சாதி பெரிதல்ல 
என் சாதி பெரிதல்ல 
பெஞ்சாதியை பெரிது !
செயல்படு சிந்தித்து  
சிறக்கும் 
வாழ்க்கை !

டினமன்று 
விரும்பிச் செய்தால் 
உழைப்பு !

மடியவில்லை 
இன்றும் வாழ்கிறது 
அடிமை மோகம் !

சிரித்திட வேண்டினார் 
புகைப்படக் கலைஞர்
செத்தப்பிணத்தை !

வாழ்கின்றனர் இன்றும் 
கடையெழு வள்ளல்கள் 
புரவலர்கள் !

உண்மை 
சிறுதுளி பெருவெள்ளம் 
ஹார்வர்டு தமிழ் இருகை !


.

கருத்துகள்