கவிஞர்.முனைவர் ஆ.மணிவண்ணன் உதவி ஆணையர் காவல்துறை. மதுரை. . நூல் அறிமுகம்.





கவிஞர்.முனைவர் ஆ.மணிவண்ணன் உதவி ஆணையர் காவல்துறை. மதுரை. 

.
நூல் அறிமுகம்.
-------------------------
பெயர்     : ஹைக்கூ உலா

ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி.         உதவி சுற்றுலா அலுவலர்.
                       மதுரை.
                     
வெளியீடு :
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், 
சென்னை-600 017.
பக்கம்120. விலை 80 ரூபாய் .
தொலைபேசி : 044 24342810, 24310769 
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com



                தமிழக சுற்றுலாத்துறை அலுவலர்.தன் ஓய்வு நேரம் முழுவதும் தமிழுக்கு செலவழிப்பவர். பிறர் அறியும் வகையில் கருத்தாழமிக்க எளிய கவிதைகள் படைப்பது மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்வதை மட்டுமே தனது பணியாகச் செய்து வரும் ஒப்பற்ற தமிழ் காவலர்.

கவிதை இலக்கியத்தைப் தன் மூச்சாகக்  கொண்ட பெருந்தகை.

இது கவிஞரது 17 வது நூல்.

முனைவர் இரா மோகன் அய்யாவும் ,எங்கள் அதிகாரி முதுமுனைவர் வெ.இறை அன்பு இ.ஆ.ப ஆகிய அறிஞர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.

சிந்தனையில் பெரியாரியலும் பொதுவுடைமைக் கருத்துக்களும் இணைந்த கவிதைகள்.

ஒவ்வொன்றும் ஒரு படிப்பினைத் தரும்.

அரசு அலுவலரின் லட்சத்தில் ஓரிருவர் மட்டுமே சமூகத்திற்காக சிந்திப்பவர்கள்.அதில் கவிஞர் முன்னணியில் நிற்கின்றார்.

வாங்கிப் படித்து வாழ்த்துங்கள்.நன்றி

கருத்துகள்