நூல் அரங்கேற்றம்
நூல் அரங்கேற்றம் - 1 மற்றும் ‘குதிரையாளி’ ஹைக்கூ வெளியீட்டுவிழா 28.12.2017
அன்று முற்பகல் 11.30 மணிக்கு ‘நூல் அரங்கேற்றம் மற்றும் குதிரையாளி நூல் வெளியீட்டு விழா’ உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையேற்று ‘குதிரையாளி’ ஹைக்கூ கவிதை நூலை வெளியிட்டு உரையாற்றினார். தமிழ்த்திரு க.ஜெய்சங்கர் அவர்களின் ‘திருக்குறளில் எழுத்தும் சொல்லும்’ ஆய்வு நூல், கவிஞர் மீனாசுந்தர் அவர்களின் ‘மருதத்திணை’ கவிதை நூல், கவிஞர் பொம்பூர் குமரேசன் அவர்களின் ‘அப்பாவின் வேட்டி’ கவிதை நூல், கவிஞர் சுபிபிரேம் அவர்களின் ‘குதிரையாளி’ ஹைக்கூ கவிதை நூல், அவ்வை நிர்மலா அவர்களின் ‘அவ்வையார்’ வரலாற்று நாடகக் காப்பியம், சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர் திருமதி.வாணமதி (எ) மதிவதனி அவர்களின் ‘எச்சங்கள்’ புலம்பெயர் சிறுகதை நூல் ஆகிய நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
நூல் அரங்கேற்றம் - 2 (30.01.2018)
30.01.2018 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்ற நூல் அரங்கேற்ற நிகழ்வில், திரு.டி.கே.இரவீந்திரன் அவர்களின் ‘நந்திபுரத்து நாயகன்’ வரலாற்று நாவல், கவிஞர் கௌதமன் நீல்ராஜ் அவர்களின், ‘கருவாய் உருவான என் மழலையே’ கவிதை நூல், கவிஞர் இரா.இரவி அவர்களின் ‘ஹைக்கூ உலா’ ஹைக்கூ கவிதை நூல், திரு.துரை.தனபாலன் அவர்களின் ‘திருக்குறள் காமத்துப்பாலில் இலக்கிய நயம்’ ஆய்வு நூல், கவிஞர் மதுரா.வேள்பாரி அவர்களின் ‘அகம் மலர்ந்த ஆம்பல்கள்’ கவிதை நூல் ஆகியவை அரங்கேற்றம் செய்யப்பட்டன. இந்நிகழ்வின் ஒரு பகுதியாகக் கவிஞர் மதுரா.வேள்பாரி அவர்களின் ‘அகம் மலர்ந்த ஆம்பல்கள்’ கவிதை நூல் வெளியீடு செய்யப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக