முனைவர் வெ .இறைஅன்பு இ. ஆ .ப அவர்களின் தன்னம்பிக்கை சிந்தனைகள் தொகுப்பு கவிஞர் இரா .இரவி

முனைவர் வெ .இறைஅன்பு இ. ஆ .ப அவர்களின் தன்னம்பிக்கை சிந்தனைகள்


தொகுப்பு கவிஞர் இரா .இரவி

நாம் கல்லாகப் படைக்கப் பட்டோம் .நம்மை நாம்தான் சிற்பமாக
மாற்றிக்கொள்ள வேண்டும் .இதில் நாமே கல் நாமே உளி நாமே சுத்தியல்
நாமே சிற்பியும் கூட.

நம் திறமையும் தனித் தன்மையும் நேர்மையும் மட்டுமே
நமக்கு சிபாரிசு சான்றிதழ் தரவேண்டும் .

எவன் சோம்பலோடு இருக்கிறானோ
அவனுக்கு வறுமைதான் வரமாக அளிக்கப்படுகிறது

தான் இன்னும் பயல வேண்டி உள்ளது எனத் தன்
வெறுமையை உணர்பவனே பண்டிதனாக முடியும் .

தலைகனம் இழப்பவர்களே தலை நிமிரவும் முடியும் .

வார்த்தைகளால் ஒருவரை குணப் படுத்தவும் முடியும்
ரணப் படுத்தவும் முடியும் .

புல்லாங்குழல்கள் எப்போதும் காலியாக கிடக்கின்றன
குப்பைத்தொட்டிகள் நிறைந்து இருப்பதாக குதூகலிக்கின்றன .

பிரச்சனைகளை எதிர் கொள்வதன் மூலம்தான்
தீர்வு காண முடியுமே தவிர அவற்றிலிருந்து
ஓடி ஒதுங்குவதால் தப்பிக்க முடியாது .

பெண்கள் துணிவு கொண்டால் அது ஆண்களைக் காட்டிலும்
பல மடங்கு தீவிரமாக இருக்கும் .

நமது தோல்விகள் நமக்கு கல்விச் சாலைகளாக இருக்கின்றன
வாழ்க்கை நம்பிக்கையிலும் அழகுணர்விலும் அடங்கி இருக்கிறது .

நம்பிக்கையுள்ளவன் கண்களில் இருள் கூட விளக்குகளாகி
எதிர்காலத்தை வெளிச்சமாக்குகிறது .

ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக் காட்டுவதே சிறந்த நிர்வாகம் .

அயர்ச்சியும் அலுப்பும் ஏற்படாமல் வாழ நாம் நேரத்தை சரியாகப்
பயன்படுத்த கற்று இருக்க வேண்டும் .

கடிகாரத்தில் இருப்பவற்றை முள் என்று சொல்வது
சற்று ஏமாந்தால் அவை குத்திவிடும் .

நாம் எந்தப் பணிக்காக முயற்சி செய்கிறோமோ அதில் முழுமையும்
தீவிரமும் வேண்டும் .

வாழ்க்கை உழைப்பை நேசிக்காததால்தான் புளித்துப் போய் விடுகிறது .

வலியைப் பொறுத்துக் கொள்ளாத மூங்கில் எப்படி புல்லாங்குழல் ஆகமுடியும் .

மனிதன் எப்போது தேங்குகின்றானோ அப்போது அவன் நதியாக இல்லாமல் குட்டை யாகி விடுகிறான் .

முயற்சி முழுமையாக இருக்குமேயானால் விதி என்று சொல்லப்
படுபவற்றை மாற்றி அமைக்க முடியும் .

காலைக் கடனைப் போல வியர்வையும் கட்டாயமாக்கப்படும் சமூகத்தில்தான் சாதனைகள் பூத்துக் குலுங்கும் .

நாம் நேசிக்காவிட்டால் உழைப்பு வெறும் பிழைப்பு நோக்கி நடத்தப் படுகிற சாதாரண செயல்பாடு .
.
மகுடதிற்காகக் குனிவதும் தலைகுனிவுதானே

பதற்றம் இருந்தாலே மூளையின் செயல்பாடு பாதியாகக் குறைந்து விடும் .

பதற்றம் ஏன் ?ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால் அதற்கு முக்கியக் காரணம் திட்டமிடாமைதான் .

நாம் எதைக் கண்டு அஞ்சி ஓடுகிறோமோ அது நம்மைப் பயமுறுத்துகிறது
மனிதனை பின்னுக்குத் தள்ளும் அசுரபலம் பயத்திற்கு உண்டு .
சத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை .
பயம் கொள்ள ஆரம்பித்தால் அது விஸ்வரூபம் எடுத்து படாதபாடு
படுத்துகிறது

புத்திசாலிகள் பாம்புகளைக் கூட மாலையாக்கிக் கொள்கிறார்கள் .

வாழ்க்கை என்பது அடுத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது
அவர்கள் அனுபவங்களிலிருந்து நம்மை உருவாக்கிக்கொள்வது.

அன்பு விதையைப் போல மென்மையாகவும்
கோபம் கல்லைப் போல கடினமாகவும் இருக்கின்றன .

தொடர்ந்து மாணவனாக இருக்கச் சம்மதிப்பவர்கள்
சிறந்த ஆசிரியர்களாகத் திகழ முடியும் .

நமக்குள் இருக்கும் சக்தி வெளிப்பட வேண்டும் என்றால் நம்மைப்
போராடச் செய்கின்ற சுழல் நிலவ வேண்டும் .சில நேரங்களில்
நாமே சுழலை உருவாக்க வேண்டும் .

.
ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஏன்? முடியாது என்று
கேட்டவர்களால் உருவானது .

மோசமான துணையைக் காட்டிலும்
அமைதியான தனிமை அழகானது .

ஆன்மிகம் என்பது சாமி கும்பிடுவதில் இல்லை .எந்த உயிரையும்
துன்புறுத்தாமல் இருப்பதுதான் உண்மையான ஆன்மிகம்.

கடவுள் நம்மைக் காப்பற்றட்டும் .நாம் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை
.
நாம் இறைமையை வழிபடுவதுகூட நம்பிக்கையினால் அல்ல
சந்தேகத்தினால்தான் .

இயல்பாகப் பூக்கிறபோது புன்னகையும் பூவாகிவிடுகின்றது .

இயற்கையின் ஒவ்வொரு செயலும் நன்றிஅறிதலினால் நிகழ்கிறது.
.
உணராத ஆற்றலும் ஊறாத நீரும் தாகத்தைத் தணிக்க முடியாது.
.
புதிதாகப் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும் .
இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும் .

எல்லோரும் உயர்ந்த குறிக்கோளுடன்தான் பயணத்தை ஆரம்பிகிறார்கள்.ஆனால்அதில் விடாப் பிடியுடன் வைராக்கியமாக
இருப்பவர்கள் ஒரு சிலர்தான் .அவர்கள்தான் நீடித்து நிற்பவர்கள் .
பலர் குறிக்கோளை வரையறுக்கிறார்கள்.ஆனால் சிலர் மட்டுமே
அதில் உறுதியாக இருக்கிறார்கள் .

உண்மையாய் இருப்பவர்கள் தமக்குள் மலர்ச்சியைப் பெற்று இருப்பவர்கள் .ஜீவித்து இருப்பவர்கள்.கொஞ்ச காலம் வாழ்ந்தாலும்
தங்களைச் சுற்றிப் பல எண்ணஅலைகளை எழுப்பிக் கொண்டேஇருக்கிறார்கள்

-- முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தொகுத்த
இறைஅன்புவின் சிந்தனை வானம் நூலில் இருந்து
தொகுப்பு கவிஞர் இரா .இரவி

கருத்துகள்