பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! குடும்பச்சுமை ! கவிஞர் இரா .இரவி !



பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !

குடும்பச்சுமை  ! கவிஞர்  இரா  .இரவி  !

கனக்கவில்லை தலைச்சுமை    
கனத்தது நெஞ்சம் 
குடும்பச்சுமை   

சுமை சுமையே இல்லை 
சுமையும் சுகமே 
குடும்பச்சுமை  ! 


ஏழைகளின் 
கவலைக்காரணி 
குடும்பச்சுமை   

கூட்டுக்குடும்பம் 
உடைந்ததால் கனத்தது 
குடும்பச்சுமை   

குடும்பத்தலைவன் 
தலையில் வந்தது 
குடும்பச்சுமை   

எண்ணிக்கை  குறைந்தும் 
குறையவில்லை 
குடும்பச்சுமை   

விலைவாசி ஏற்றம் 
மேலும் பாரம் 
குடும்பச்சுமை   

கொக்கின் தலையில் 
பனங்காய் 
குடும்பச்சுமை   

வாழ்க்கையில்   போராட்டமல்ல 
போராட்டமே வாழ்க்கையாக 
குடும்பச்சுமை   

இயேசுவின் சிலுவையின் 
சுமக்கின்றனர் 
குடும்பச்சுமை   

தனிக்கட்டைகளுக்கு 
என்றுமில்லை 
குடும்பச்சுமை   

குடிகாரக் கணவனால் 
மனைவியின் தலையில் 
குடும்பச்சுமை   

பகிர்ந்துக் கொண்டால் 
பாரம் குறையும் 
குடும்பச்சுமை   

அரசியல்வாதிகளின் ஊழல் 
பொதுமக்கள் தலையில் 
குடும்பச்சசுமை !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்