ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


வடிப்பார்  கண்ணீர்
காந்தியடிகள்  இருந்தால் 
மதுக்கடைகள் !

மதுக்கோப்பை மோதல் 
உணர்த்தியது 
பின்னால் வரும் மோதலை !

மதுக்கோப்பை மோதி 
சரிபார்த்தனர் 
அளவை !

நட்டநடுநிசியில் அல்ல 
பட்டப்பகலில் நடக்க முடியவில்லை 
பெண்கள் !

உண்டு ஏட்டில் எழுத்தில் 
இல்லை நடைமுறையில்
பெண் விடுதலை !

போகப்பொருள்  அல்ல 
உயிரும் உணர்வும் உள்ளவள் 
பெண் !

எண்ணி விடலாம் 
விரல் விட்டு 
புதுமைப்பெண்கள் !

அகிலம்முழுவதும் 
ஆணாதிக்கத்தால் 
அடிமைப்பெண்கள் !

பொதுவாக்குவோம் 
இருபாலருக்கும் 
சமையல் அறையை !

கோடை மழை
குதூகலத்தில் 
உழவன் !

ஒன்றுபட்டால் 
உறுதியாகும் வெற்றி 
உணர்த்தியது  சல்லிக்கட்டு !

முடியவில்லை  முத்தெடுக்க 
முழுநேர அரசியல்வாதிகளால் 
பகுதிநேர அரசியல் ?
ஆசையால் அழிந்தும் 
வரவில்லை அறிவு   
அரசியல்வாதிகளுக்கு !

உடன் பிறந்த நோயானது 
ஊழல்   
அரசியல்வாதிகளுக்கு !

சடங்குகளில் 
ஒன்றானது 
நிதிநிலை அறிக்கை !

ஏற்றமின்றி 
ஏமாற்றத்தில் 
ஏழை மக்கள் !

உயிருக்கு உலை
வாகனம் ஓட்டுகையில் 
அலைபேசியில் பேசுதல் !

பிறக்கையில் இருந்தளவே 
இறுதியிலும் இருந்ததா ?
கர்ணனின்   கவசம் !

பெட்ரோல் விலை ஏற ஏற
இறங்குகிறது 
ஆள்வோரின் மதிப்பு !


கருத்துகள்