ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !  கவிஞர் இரா .இரவி !

பறப்பதில்லை 
சிறகை சுமையாக 
நினைக்கும் பறவை !
 
அன்று நோயுடன் சிலர் 
இன்று நோயின்றி சிலர் 
உணவு முறை !

வேண்டாம் நெகிழி 
வேண்டும் இலை
காக்கும் உடல்நலம் !

சுவை கூடக் கூட  
கூடுகின்றது 
தீங்கு !

உணவில் 
செயற்கை வண்ணம் 
புற்றுநோயுக்கு வரவேற்பு !

எதிலும் 
இயற்கை வளர்ச்சி இதம் 
செயற்கை வளர்ச்சி தீங்கு !
செலவிடமாட்டோம் சாமானியனுக்கு 
செலவிடுவோம் சமாதிக்கு 
அரசியல் !

கலங்குவதில்லை 
கடன்பட்டார் நெஞ்சம் போல்  
ஆள்வோர் !

எங்கும் எதிலும் தமிழ் 
சரி 
அரசுப்பள்ளியில் தமிழ் ?
அன்று பொதுநலம் 
இன்று தன்னலம் 
அரசியல் !


பாரபட்சம் 
உயிர்ப்பிக்கின்றனர் செத்தமொழியை 
அழிக்கின்றனர் உயிர்ப்பான மொழியை !


கரும்புள்ளியாகின்றான் நூறு திருடியவன் 
கோடிகள் திருடியவன் 
பெரும்புள்ளியாகின்றான் !

கருத்துகள்