சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
இருக்காது சும்மா
ஆடிய காலும் பாடிய வாயும்
ஊழல்வாதி கையும் !
மிதந்தபோதும்
ஒட்டுவதில்லை தண்ணீர்
தாமரையிலை !
செய்யவில்லை நன்மை
தமிழகத்திற்கு
தாமரையும் இலையும் !
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
சரி கைது செய்யலாமா ?
போராடும் மன்னர்களை !
இந்தா ! அந்தா !என்றே
ஏமாற்றுகின்றனர்
பெண்கள் இடஓதுக்கீடு !
தடுக்கி விழுந்தால்
மதுக்கடை !
நீந்தியது
பிறந்ததும்
மீன் !
தன் குஞ்சு
பொன் குஞ்சு
அரசியல்வாதிகளுக்கு !
வெந்து தணிந்தது காடு
பல உயிர்களைக் கொன்று
குரங்கணி !
மேலாண்மை வாரியம் அமைக்காமல்
மேலாண்மை செய்யும்
நடுநிலையற்ற நடுவணரசு !
வேட்டைக்காடானது
அந்நியர்களுக்கு
தமிழகம் !
தீதும் நன்றும்
அமையும்
நாக்கால் !
நேரம் இருப்பதில்லை
பொல்லாங்கு பேசிட
உழைப்பாளிக்கு !
கருத்துகள்
கருத்துரையிடுக