என்னவள்!
கவிஞர் இரா. இரவி
சேலையணிந்த
கவிதை என்னவள்! |
மூளையின் மூலையில்
நிரந்தரமாய் வசிப்பவள் என்னவள்! |
சுடிதார் அணியும்
சொர்க்கம் என்னவள்! |
நடமாடும்
சிரபுஞ்சி என்னவள்! |
கால் முளைத்த
தாஜ்மகால் என்னவள்! |
நடந்து வரும்
பிருந்தாவனம் என்னவள்! |
நடமாடும்
நயாகரா என்னவள்! |
கூந்தல் உள்ள
குற்றாலம் என்னவள்! |
விழிகளால் பேசும்
விசித்திரம் என்னவள்! |
உலா வரும்
நூலகம் என்னவள்! |
இல்லை இப்போது
அன்னப்பறவை எடுத்துக்காட்டு என்னவள்! |
பலாவை மிஞ்சும்
இனியவள் என்னவள்! |
சிறகு முளைக்காத
வண்ணத்துபூச்சி என்னவள்! |
பசியை மறக்கடிக்கும்
பாவை அவள் என்னவள்! |
தேன் சிந்தும்
பூஞ்சோலை என்னவள்! |
கருத்துகள்
கருத்துரையிடுக