கவிஞர் இரா. இரவி ! அவர்களின் படைப்பாற்றல் பற்றி முனைவர் ந.செ.கி. சங்கீத்ராதா அவர்களின் திறனாய்வு நூலுக்கு நான் எழுதும் நிதரிசனமான விமர்சனம் !





கவிஞர் இரா. இரவி !

அவர்களின் படைப்பாற்றல் பற்றி
முனைவர் ந.செ.கி. சங்கீத்ராதா அவர்களின் திறனாய்வு நூலுக்கு
நான் எழுதும் நிதரிசனமான விமர்சனம் !

கலைஞன் பதிப்பகம்! 19.கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,
சென்னை .600 017.
பேச 04424345641.
பக்கம்102. விலை 90 ரூபாய் 

முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை, பதிவு எண் : 969,
10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை-625 002.  தொலைபேசி : 0452 2533 524, செல்லிட பேசி : 94437 43524
******
அன்புள்ள இரா.இரவி,

      தங்கள் படைப்பாற்றல் பற்றி முனைவர் ந.செ.சி. சங்கீத் ராதா அவர்கள் நூலுக்கு விமர்சனம் எழுத நினைத்து, மாறாக உங்களைப் பற்றியே எழுதி விட்டேன்.

      நேற்று வரை உங்கள் படைப்புகளுக்கு நான் எழுதியது விமர்சனம்.  இன்று நான் எழுதியிருப்பது இரா. இரவி என்ற கவிஞர் பற்றிய நிதர்சனமான உண்மைகள்.

      சற்றே தடம் புரண்டிருந்தாலும் அழகுக் கவிதைத் தேருக்கு வடம் பிடித்த மன நிறைவில் மகிழ்கிறேன்.

என் எண்ணத்தில் இரா.இரவி !

      இது நாள் வரை கவிஞர் இரா.இரவி படைத்துள்ள கருத்துள்ள கவிதை நூல்கள் பற்றியும், ஒரு சில கவிதைகளின் சிறப்புக்களை மேற்கோள் காட்டியும், படிப்படியான முன்னேற்றம், பெற்ற பட்டங்கள், பழகிய சான்றோர்கள், பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ள விபரம் .எழுதி உள்ளார். 
  திருமலை மன்னர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர், பட்டிமன்றப்  பேச்சாளர் ,முனைவர் ந.செ.கி. சங்கீத் ராதா அவர்கள் சிறப்பாக ஒரு நூலைஎழுதி  உள்ளார் அவருக்கு முதல் பாராட்டு .
   இந்நூலை அண்ணாமலை  பல்கலைக் கழகம் மலாய் பல்கலைக் கழகம்,கலைஞன் பதிப்பகம் மூன்றும் இணைந்து வெளியிட்டு உள்ளனர் .அவர்களுக்கு இரண்டாவது பாராட்டு இப்படிப்பட்ட திறமைமிக்க நூலுக்கு விமர்சனம் எழுதுவது கடினம் தான். எனினும் என்னால் முடிந்த மட்டும் முயன்றுள்ளேன்.

      என் இனிய நண்பர் இரா. இரவி (நான் பெறாத பிள்ளை) எத்தனையோ சாதனைகள் செய்து பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் இன்னமும் விட்டம் பார்த்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்.  காரணம் : நான் இதுநாள் வரை சாதித்ததை விட, எதிர்காலத்தில் இன்னமும் சாதிக்க வேண்டியுள்ளது பற்றித்தான் என் எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டேயிருக்கிறது என்றே கூறிக் கொண்டிருக்கிறார்.

      இவர் இதுவரை படைத்துள்ள நூல்களுக்கு கொடுத்துள்ள காரணமுள்ள கவர்ச்சியான தலைப்புகள், படிப்போர் உள்ளத்தில் வாசிக்க வேண்டும், வாசித்ததை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஒரு தூண்டுதலாய் அமைக்கப்பட்டுள்ளது.

      இவர் ஓர் ஏவுகணை, அதிலிருந்து எய்யப்படும் பகுத்தறிவு அம்புகள், பழமையில் ஊறிக்கிடக்கும் பலரை சிந்திக்க வைத்துள்ளது என்றால் மிகையாகாது.  இவரது பிறவிக்குணம், எதையும் எதிர்பாராமல், எந்த எதிர்ப்பையும் சமாளித்து தன்னம்பிக்கையோடு முன்னேற்ற நோக்கம் கொண்டது.

      பன்முகப் பார்வை கொண்டு இன்றைய சமுதாய வாழ்வின் அவலங்களை அலசி ஆராய்ந்து அதற்கொரு தீர்வு காணக்கூடிய நூல்களை படைப்பது மட்டுமல்ல, தன் இன்முகப் பார்வையால் எவருடனும் நட்புறவு கொள்ளக்கூடிய குணத்தில் வல்லவர், நல்லவர்.
      பட்டிமன்றம், மேடைப்பேச்சு, கவியரங்கம், நூல்கள் எழுதுவது என எதையும் ஒரு சவாலாக ஏற்கக் கூடியவர்.  வாய்ப்புகளைத் தேடாதவர். வாய்ப்புகள் தானாகத் தேடி வரும் இவரது திறமை கண்டு.

      எந்த மேடையில் தோன்றிப் பேசினாலும் ஆரம்பத்தில், “கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழ் என்றே உரை வீசிப் பேச்சைத் துவங்குவார்.  அந்த பேச்சின் இனிமையில், அவையோர் அகத்தில், “தமிழன்னையே காட்சி தருவது போன்ற தோற்றத்தை உருவாக்கக் கூடிய திறமை மிக்க இயக்குனர்.
      இவரது ஹைக்கூ கவிதைகள் மக்கள் மனதில் ஆழப் பதிவதற்குக் காரணம், கருத்துக் செறிவும், எளிமையான வார்த்தைப் பிரவாகமும் தான்.
      இவரது படைப்புகளில் ஒன்று, “என்னவள் என்ற கவிதை நூல்.  தன் துணைவியைப் பற்றி இவர் எழுதியிருந்தாலும், வாசகர் படிக்கும்போது தன்னவளைப் பற்றி தான் எழுதியது போன்ற நிலைமையை உருவாக்கி விடும்.
      பண்பு, அன்பு, பண்பாடு, மனித நேயம், படைப்பாற்றல், பகுத்தறிவுச் சிந்தனை – இவைகளின் மொத்த வடிவம் தான் கவிஞர் இரா. இரவி.  இரைக்க இரைக்க ஊறும் கிணறு போன்ற படைப்பாளி.
      “இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர்நாண
      நன்னயம் செய்து விடல்
               (நட்பின் இலக்கணம்)
      “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்பது அரிது
        (அறிவுப் பசி)
      “நவில்தொறும் நூல்நயம் போலும் - பயில்தொறும்
      பண்புடை யாளர் தொடர்பு.              (பண்பின் இலக்கணம்)
      “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
      உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
      அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
                                                (துணிவே துணை)
      தமிழன்னையின் தவப்புதல்வனாய்
      வள்ளுவத்தின் வழிநடந்து
      பாரதியை பக்கத்துணையாக்கி
      பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் கொள்கைப் பிடிப்போடு
      தன்னம்பிக்கைத் தேரில் வலம் வரும்
      கவிஞர் இரா.இரவியே!
      வாழ்க நீ வளமுடன்
      வளர்க நல் உளமுடன்!

கருத்துகள்