ஹைக்கூ உலா- கவிஞர். இரவி - ஒரு பார்வை- பொன். குமார் !




ஹைக்கூ உலா- கவிஞர். இரவி - ஒரு பார்வை- பொன். குமார் !

கவிஞர் இரா. இரவி.   eraravik@gmail.com
பொன் . குமார் !  
 

21/15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு 
லைன் மேடு 
சேலம் 636006
9003344742


வெளியீடு
வானதி பதிப்பகம்
23 தீன தயாளு தெரு
தி. நகர்
சென்னை 600017
விலை ரூ 80/- 

கவிஞர் இரா. இரவியின் முதல் தொகுப்பு ' கவிதைச் சாரல் '. இது புதுக்கவிதைகளால் ஆனது. அவரின் இரண்டாம் தொகுப்பே ' ஹைக்கூ கவிதைகள் '. இது ஹைக்கூக்களால் திறந்த து. இத் தொகுப்பு 1998ஆம் ஆண்டு வெளியாகியுள்ள்து. அது முதல் ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.. ்்ஹைக்கூ எழுதி வருகிறார் . ஹைக்கூவுடன் இருபது ஆண்டுகளாக உலா வந்தவர் 2017 ஆம் ஆண்டு ' ஹைக்கூ உலா ' விற்கு வழி வகைச் செய்துள்ளார்.
ஹைக்கூ எனபதற்கு ஒர் இலக்கணம் இருந்த து. தமிழகத்தில் ஹைக்கூவிற்கு இலக்கணம் தேவையில்லை என்னும் நிலை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மூன்று வரிக்கு மிகாமலிருக்க வேண்டுமென  எழுதப் பட்டோ , எழுதப் படாமலோ ஒரு விதி இருந்து வருகிறது. அந்த மூன்று வரிக்குள் ஒரு செய்தியைச் சொல்லி விட வேண்டும். இக்கலையை அறிந்தவர்கள் வெகு சிலரே. அறியாதவர்கள், தெரியாதவர்கள் சிலர் ஹைக்கூவே தேவையில்லை என்று விமரிசித்தும் வருகின்றனர்.
தடைப் படுத்தவும் முயன்று வருகின்றனர். 

தடைகளை உடைத்து, தடைகளை மீறி தொடர்ந்து எழுதி வருபவர் கவிஞர் இரா. இரவி. ஹைக்கூ என்னும் வடிவத்தில் மூன்று வரிக்குள் ஒரு செய்தியை, ஒரு கருத்தைக் கூறும் கலையைக் கைவரப் பெற்றவராக வலம் வருகிறார்.
தன்னம்பிக்கை தலைப்பில் எழுதப் பட்ட ஹைக்கூக்களில் ஒன்று !

சில நேரம் வரம்
சில நேரம் சாபம்
நினைவாற்றல்...

நினைவு என்பதில் இரண்டும் உள்ளது. நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. சிலவற்றை மறப்பது நல்லது. சிலவற்றை மறவாமலிருப்பது நல்லது. அதையே கவிஞர் வரம் என்கிறார். சாபம் என்கிறார்.

காட்சிப் பிழை
நகர வில்லை
சூரியன் !

இயற்கை என்னும் தலைப்பில் எழுதப்பட்டதில் ஓர் அறிவியல் உண்மையைத் தெரிவித்துள்ளார். காலையில் சூரியன் உதிக்கும். மாலையில் மறையும். இது காணும் காட்சி. இக் காட்சியைக் காண்பதே இன்பம். ஆனால் இக் காட்சி உண்மையானதல்ல. இதைக் காட்சிப் பிழை என்கிறார். பூமியே சுழல்கிறது என்பதைப் புரிவித்துள்ளார்.

பிரிய மனமில்லை
பிரித்த து காற்று
மரத்திலிருந்து இலை !

இலையுதிர் காலம் என்பது ஒரு பருவம். இலைகள் உதிரவே செய்யும். இருப்பினும் இலை பழுத்தாலும் காய்ந்தாலும் உதிரவே செய்யும். மரத்திலிருந்து இலை பிரிய மனமில்லாமல் தடுமாறும் வேளை காற்று பிரித்து விடுகிறது என்கிறார். இயற்கையின் நிகழ்வு என்றாலும் கவிஞர் கற்பனக் காற்றைக் குற்றம் கூறியுள்ளார்.

எண்ணிலடங்காதவை
எண்ணம் கவர்ந்தவை
மலர்கள் !

என்னும் ஒரு ஹைக்கூவை மலர்கள் தலைப்பில் எழுதியுள்ளது போல் இத்தொகுப்பிலும்  எண்ணிலடங்காதவை எண்ணம் கவர்ந்தவையாக உள்ளன ஹைக்கூக்கள்.


பறவைகள் தலைப்பில் பல ஹைக்கூகள். பல பறவைகள் போல பல ஹைக்கூகள். அதிலொன்று.

தோற்றுப் போனேன்
பிடிக்க முயன்று
வண்ணத்துப் பூச்சி !

வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க முடியாது என்பதை விட பிடிக்கக் கூடாது. பிடித்தால் அது துடிக்கும் என்பதைக் கவிஞர் சிபி ஒரு ஹைக்கூவில் எழுதியுள்ளார். வண்ணத்துப் பூச்சியைக் கவிதையிலும் ஹைக்கூவிலும் பிடித்தவர்கள் அதிகம் . ஹைக்கூக் கவிஞனைக் கண்டு வண்ணத்துப் பூச்சிகள் பறந்தோடின என்றார் கவிஞர் சிற்பி. வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க முயன்று தோற்றுப் போனாலும் கவிஞர் ஹைக்கூ பிடிப்பதில் தோற்றுப் போக வில்லை என்பதை அவரின் ஹைக்கூக்கள் உறுதிப் படுத்துகின்றன.

மனிதனை
விலங்காக்கும்
சாதி வெறி !

உயர் திணையிலிருந்து
அஃறிணைக்கு இறக்கம்
சாதி வெறி !

சாதி வெறி குறித்து இரண்டு ஹைக்கூக்கள். இன்று சமூகத்தில் புரையோடி இருக்கும் ஒரு பிரச்சனை. சாதியை வைத்தே மனிதர்களைப் பிரிக்கின்றனர். சாதியை வைத்தே காதலைக் கொல்கின்றனர். சாதியை வைத்தே அரசியல் செய்கின்றனர். சாதியை வைத்தே கலவரம் செய்ய முயல்கின்றனர். 
கவிஞர்களும் சாதி வெறிக்கு எதிராக கவிதை எழுதிய வண்ணமே உள்ளனர். ஆனாலும் சாதி ஒழிந்த பாடில்லை. கவிஞரம் எழுதியுள்ளார். கோபத்தை ஹைக்கூவாக்கியுள்ளார். சாதி வெறியர்களை விலங்குக்கு ஒப்பிட்டுள்ளார். 
விலங்குகளுக்கு சாதி இல்லை என்பது உண்மை.
ஆனால் இரண்டு கவிதைகளும் ஒரே தொனியிலேயே உள்ளன.

எல்லோரும் சொல்கின்றனர்
மது விலக்கு
எப்படி வந்தன மதுக் கடைகள்?

என ஹைக்கூ மூலம் வினா எழுப்பியுள்ளார். மது விலக்கை மக்கள் விரும்பினாலும் அரசு விரும்பும் வரை மதுக் கடைகள் இருக்கும். மக்கள் வாழ்வை அழிக்கும்.

விலகவில்லை
எந்த ஆட்சியிலும்
வறுமை இருட்டு !

அரசியல் என்னும் தலைப்பில் எழுதப் பட்ட ஹைக்கூ ஒன்றில் ஆட்சிகளால் வறுமையை மட்டும் விரட்ட முடியவில்லை என அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். வறுமையில் இருப்பவர்கள் விடுதலைப் பெற வேண்டும் என்கிறார். இதே தலைப்பில் எழுதிய மற்றொன்று .

சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !

இது இரண்டு வரிகளை மூன்றாக்கியது போலுள்ளது. பொய்யும் அரசியலும் சேர்ந்தே இருக்கும். பிரிக்க முடியாது.

ஹைக்கூ எழுதுவது இயல்பானது. கவிஞர் இரா. இரவியோ எப்போதும் இயல்பாக ஹைக்கூவை எழுதிக் கொண்டிருப்பவர். ஒரு பொருளை எடுத்துக் கொண்டு ஏராளமான ஹைக்கூக்களை எழுதும் ஆற்றல் பெற்றவர். 
ஹைக்கூக்களுக்குத் தலைப்பு தேவை இல்லை எனினும் தலைப்பு வாரியாக ஹைக்கூக்களைத் தொகுத்துத் தந்துள்ளார். ஹைக்கூக்கள் என்று அடையாளப் படுத்தப் படாமல் இருந்தால் ஒரு தலைப்பின் கீழ் எழுதப் பட்ட புதுக் கவிதையாகவே இருக்கும். ' அறம் ' என்னும் அத்தியாயம் அவ்வாறே எழுதப் பட்டுள்ளது.
கவிஞர் இரா. இரவி அவர்களிடம் முற்போக்குச் சிந்தனைகள் மிகுதியாகவே உள்ளன. மக்கள் முன்னேற்றத்திற்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் வழிவகுக்கும் ஹைக்கூகள் கவிஞர் உலா வரச் செய்துள்ளார். ஹைக்கூக்கள் அதிகம் எழுதுவது இரவியின் பலம் மட்டுமல்ல பலவீனமுமாகும். ஐப்பானிய ஹைக்கேவிற்கு என்று ஓர் இலக்கணம் இருந்தது. 

தமிழ் நாட்டில் அந்த இலக்கணங்கள் இல்லை என்றாலும் சில இலக்கணங்களை எழுத்தாளர் வகுத்தார். கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் அமுத பாரதி, கவிஞர் அறிவு மதி போன்றோர் தனக்கென ஒரு பாதையை வகுத்து ஹைக்கூவைப் படைத்தனர்.

 கவிஞர் இரா. இரவியும் அனைத்து இலக்கணங்களையும் உடைத்து ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கி அத்தடத்திலேயே பயணித்து வருகிறோர். கவியரசு கண்ணதாசன் பணியில் முற்ற தூற்றினாலும் ஏற்றதொரு கருத்தை அவருக்கான அடையாளத்தைத் தெரிவிக்கும் .

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்