யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
இமைக்காமல் பார்க்கும் போட்டியில்
என்னவளிடம் தோற்றுவிட்டேன் நான் !
காந்தம் இரும்பைக் கவர்ந்து இழுக்கும்
கள்ளியின் கண்கள் என்னைக் கவரும் !
கண்ணும் கண்ணும் நோக்கும்போது
காளையின் உடலில் வேதியல் மாற்றங்கள் !
காளையின் உடலில் வேதியல் மாற்றங்கள் !
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
அழமாகப் பதிந்தது அழகிய வரிகள் !
அழமாகப் பதிந்தது அழகிய வரிகள் !
பார்வை உள்ளவர்களின் காதல் முன்னுரை
பார்வையால்தான் எழுதி வருகின்றனர் !
பார்வையால்தான் எழுதி வருகின்றனர் !
முதல் பார்வையிலேயே காதல் வருவதுண்டு
முன்மொழிந்து வழிமொழிந்து நிகழ்வதுண்டு !
முன்மொழிந்து வழிமொழிந்து நிகழ்வதுண்டு !
கண்கள் செய்யும் யுத்தத்தில் பெரும்பாலும்
கன்னிகள் வெல்கின்றனர் காளைகள் தோற்கின்றனர் !
கன்னிகள் வெல்கின்றனர் காளைகள் தோற்கின்றனர் !
கண்கள் பேசும் இனிய நேரங்களில்
காதலர்களுக்கு இதழ்கள் மவுனமாகின்றன !
காதலர்களுக்கு இதழ்கள் மவுனமாகின்றன !
விழிகளின் மொழி காதலர்கள் மட்டும் அறிவர்
விழுந்தவர்கள் ஆழ்ந்தவர்களுக்குப் புரியும் !
விழுந்தவர்கள் ஆழ்ந்தவர்களுக்குப் புரியும் !
பரதநாட்டியக் கலைஞர்களும் தோற்கும் வண்ணம்
பாவை அவளின் விழிகள் பரதம் ஆடும் !
பாவை அவளின் விழிகள் பரதம் ஆடும் !
அன்பாகவும் பார்ப்பாள் அடித்தும் பார்ப்பாள்
அளவின்றிப் பார்ப்பாள் அப்படியே விழுங்குவாள் !
அளவின்றிப் பார்ப்பாள் அப்படியே விழுங்குவாள் !
விழியால் பசியாறி பசியினை மறப்பாள்
விடிந்ததும் பாரத்தால் மகிழ்ச்சிப் பிறக்கும் !
விடிந்ததும் பாரத்தால் மகிழ்ச்சிப் பிறக்கும் !
ஆயிரம் பேரில் அவள் அமர்ந்திருந்தாலும்
அவளது விழிகள் காட்டிக் கொடுக்கும் !
அவளது விழிகள் காட்டிக் கொடுக்கும் !
புவி ஈர்ப்பு விசை எல்லோருக்கும் பொது
பாவையின் விழி ஈர்ப்பு விசை எனக்கு மட்டும் !
பாவையின் விழி ஈர்ப்பு விசை எனக்கு மட்டும் !
விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்
விழிகளில் மின்சாரம் உள்ளது கண்டுபிடியுங்கள் !
யுத்தம் செய்யும் கண்கள் என்னவளுக்கு
யுகம் முடியும் வரை காயம் செய்து இதம் தரும் !
விழிகளில் மின்சாரம் உள்ளது கண்டுபிடியுங்கள் !
யுத்தம் செய்யும் கண்கள் என்னவளுக்கு
யுகம் முடியும் வரை காயம் செய்து இதம் தரும் !
கருத்துகள்
கருத்துரையிடுக