கவிஞர் இரா .இரவி தனது நூல்களையும் ,தான் மதிப்புரை எழுதிய நூல்களையும் நன்கொடையாக வழங்கிய விபரம் !












கவிஞர் இரா .இரவி தனது நூல்களையும் ,தான் மதிப்புரை எழுதிய நூல்களையும் நன்கொடையாக வழங்கிய விபரம் !

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சேது ராமசந்திரன் அவர்களிடம் நூலகங்களுக்காக ரூபாய் 4000 மதிப்புள்ள நூல்கள் நன்கொடை
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரைக்கு வழங்கிய நூல்கள் 101.
இரண்டாம் முறையாக 100 நூல்கள்
---------------------------------------------
அமெரிக்கன் கல்லூரி நூலகத்திற்கு வழங்கிய நூல்கள் 170.
--------------------------------------------
தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு வழங்கிய நூல்கள் 240.
--------------------------------------------------
காந்தியடிகள் அருங்காட்சியகம் மதுரைக்கு வழங்கிய நூல்கள் 100
----------------------------------------------------
பெங்களூருத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு வழங்கிய நூல்கள் 50.
---------------------------------------------------------
மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள தாய் பயிற்சி மையத்தின் நூலகத்திற்கு வழங்கிய நூல்கள் 10.
------------------------------------------------------
மதுரைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கலை மற்றும் ஓரியண்டல் கல்லூரிநூலகத்திற்கு வழங்கிய நூல்கள் 10.
இரண்டாம் முறையாக 50 நூல்கள்
---------------------------------------------------
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இயக்குனர் முனைவர் கா .மு .சேகர் அவர்களின் பாராட்டு மடல் .
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் உள்ள பிரமாண்ட நூலகத்திற்கு 101 நூல்கள் நன்கொடை வழங்கியமைக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர் திரு .முனைவர்
கா .மு .சேகர் அவர்களின் பாராட்டு மடல்.
மடல் அனுப்பிய உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர்
முனைவர் கா .மு .சேகர் அவர்களுக்கும் ,இதற்கு
உறுதுணையாக இருந்த தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் க .பசும்பொன் அவர்களுக்கும் ,உலகத் தமிழ்ச் சங்கத்தின் பணியாளர்களுக்கும் நன்றி .
ஆர்வமுள்ள தமிழ் ஆர்வலர்கள் ,கவிஞர்கள் ,எழுத்தாளர்கள், படைப்பாளிகள் நன்கொடை வழங்கி மகிழலாம் !
இரண்டாம் முறையாக 100 நூல்கள்
--------------------------------------------------------------------
வரலாற்று சிறப்பு மிக்க ,நூற்றாண்டு கண்ட அமெரிக்கன் கல்லூரி நூலகத்திற்கு வாசகர்களுக்கு பயன்படும் விதமாக கவிஞர் இரா .இரவி தான் வாசித்த மதிப்புரை எழுதிய170 நூல்களை நன்கொடையாக வழங்கினார் .நூல்கள் வழங்கிட பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள் பேருதவியாக இருந்தார்கள்.
---------------------------------------------------------------
.தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு கவிஞர்
இரா .இரவி 240 நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிய தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி தனது நூல்களையும் ,தான் மதிப்புரை எழுதிய நூல்களையும் மொத்தம் 240 நூல்களை நன்கொடையாக கல்லூரியின் பாதுகாப்பு அலுவலர் திரு,மகேஷ்வரன் அவர்களிடம் வழங்கினார் .தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி வலாற்று சிறப்பு மிக்க கல்லூரி .கவிக்கோ அப்துல் இரகுமான், கவியரசர் மேத்தா ,தமிழ்த் தேனீ இரா .மோகன் உள்ளிட்ட பல அறிஞர்கள் ,கவிஞர்கள் ,சான்றோர்கள் படித்த கல்லூரி .என் மூத்த மகன் பிரபாகரன் B.C.A படித்த கல்லூரி.எனது 10 ஹைக்கூ கவிதைகளை பாடத்திட்டத்தில் வைத்த கல்லூரி.பல சிறப்புகள் மிக்க கல்லூரிக்கு வழங்கியதில் மகிழ்ச்சி.
------------------------------------------------------------------------
தான் வாசித்த நூல்கள், மதிப்புரை எழுதிய நூல்கள் என 100 நூல்களை காந்தியடிகள் அருங்காட்சியகம் நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி நன்கொடையாக வழங்கினார்
-------------------------------------------------------------------------
பெங்களூருத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு கவிஞர்
இரா .இரவி ஐம்பது 50 நூல்களைநன்கொடையாக வழங்கினார் .
முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய அச்சம் தவிர் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய கணினி யுகத்திற்கு திருவள்ளுவர்,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்கள் எழுதிய படித்தாலே இனிக்கும் ,முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் அவர்கள் எழுதிய வான் தொட்டில் ,கவிபாரதி வாசுகி அவர்கள் எழுதிய இவர்களும் இந்நாட்டின் கண்கள் ,கவிஞர் இரா .இரவி எழுதிய கவிதைச்சாரல், என்னவள் ,ஹைக்கூ ஆற்றுப்படை ,சுட்டும் விழி உள்பட ஐம்பது 50 நூல்களை பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு தாமோதரன் அவர்களிடம் கவிஞர் இரா .இரவி நன்கொடையாக வழங்கினார்.
--------------------------------------------------------------------------------
நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்கள் நன்கொடை !
மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள தாய் பயிற்சி மையத்தின் நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்களான மனதில் ஹைக்கூ ,ஹைக்கூ ஆற்றுப்படை ,புத்தகம் போற்றுதும் , கவியமுதம் மற்றும் ஏர்வாடியார் நன்கொடையாக வழங்கி இருந்த கவிதை உறவு இதழ்கள் ,கவிதை உறவுவின் தொகுப்பு நூலான அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நூலும் நன்கொடையாக இயக்குனர் திரு .மோகனக் கண்ணன் அவர்களிடம் 10 நூல்கள்வழங்கினார் .உடன் மாணவர்கள் உள்ளனர் .
------------------------------------------------------
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு பெருமை சேர்க்கும் மதுரைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கலை மற்றும் ஓரியண்டல் கல்லூரியில் உள்ள அரிய நூலகத்திற்கு ,கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ரேணுகா அவர்களிடம் கவிஞர் இரா .இரவி தனது நூல்களான கவியமுதம் ,புத்தகம் போற்றுதும் ,சுட்டும் விழி நூல்களையும் ஏர்வாடியார் அனுப்பி வைத்த கவிதை உறவு இதழ்களும் ,அண்ணா எங்கள் அண்ணா தொகுப்பு, 10 நூல்களையும் நன்கொடையாக வழங்கினார் .
இரண்டாம் முறையாக 50 நூல்கள்
http://eraeravi.blogspot.in/2015/11/blog-post_72.html
http://eraeravi.blogspot.in/2017/04/50.html
http://eraeravi.blogspot.in/2018/01/50.html
http://eraeravi.blogspot.in/2017/04/blog-post_76.html

கருத்துகள்