கொண்டாடப்படும் தினங்கள்! கவிஞர் இரா. இரவி!

கொண்டாடப்படும் தினங்கள்!
கவிஞர் இரா. இரவி!
கொண்டாடப்படும் தினங்கள் பல உண்டு
குவளயம் போற்றும் தினம் அக்டோபர் இரண்டு!
போர்பந்தரில் கரம்சந்த் காந்தியாகப் பிறந்தார்
போராடிய போராட்டங்களால் மகாத்மா ஆனார்!
கடுங்குளிரில் தள்ளி விடப்பட்ட தென்ஆப்பிரிக்காவில்
கட்டி உள்ளனர் அழகிய நினைவுச் சின்னம்!
திருக்குறள் வழி வாழ்ந்திட்ட நல்லவர்
திருக்குறள் டால்சடாயின் வழி அறிந்திட்டவர்!
அகிம்சையை உலகிற்கு கற்பித்திட்டவர்
அறநெறியை அனைவருக்கும் போதித்தவர்!
மனிதநேய மாமணியாக வாழ்ந்திட்டவர்
மனித உழைப்பை என்றும் மதித்திட்டவர்!
ஒளிவு மறைவு இன்றி வாழ்க்கை வரலாற்றை
உண்மையாக எழுதி சத்திய சோதனை யாத்தவர்!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்
சபதம் எடுத்தார் அரையாடை அணிவதற்கு!
வட்டமேசை மாநாட்டிற்கும் அரையாடை
வடிவம் கொண்டே சென்று வந்தவர்!
பிரதமர் பதவி ஏற்கச்சொன்ன போதும்
பதவி ஆசையில்லை என்று மறுத்தவர்!
கைத்தறி ஆடைகளுக்கு உச்சம் தந்தவர்
கைவினைப் பொருட்களுக்கு சந்தை
தந்தவர்!
அஞ்சல்தலை வெளியிடாத நாடே இல்லை
அச்சடிக்கும் பணத்திலும் அவரது உருவம் !
பிறந்த நாள் கொண்டாடுவதோடு மறந்திடாமல்
பண்பாளர் கொள்கை வழி நடக்க முயல்வோம்!
காந்தியடிகள் உருவம் இல்லாத இடமில்லை
காந்தியடிகள் கொள்கைகள் கடைபிடிக்
வேண்டும்!
மதுரைக்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள்
மனம் மகிழ்கின்றன காந்தி அருங்காட்சியகம்
பார்த்து !

உலகமே கொண்டாடி மகிழும் தினம்

ஒப்பற்ற காந்தியடிகள் பிறந்த தினம்!

கருத்துகள்