வீணை ! கவிஞர் இரா.இரவி !

வீணை !  கவிஞர் இரா.இரவி !

ஒரு மரம்
விறகாவதும் வீணையாவதும்
மனிதர்களால் !

இசை தராவிட்டாலும்
பார்க்க அழகு
பழுதான வீணை !

மீட்ட மீட்ட
புதுப் புது இசை
வீணை !

யார் மீட்டினாலும்
தரும் ஓசை
வீணை !

பயின்றவர்  மீட்டினாலும்
தரும் இ சை
வீணை !

நரம்புகள் அறுந்தாலும்
போவதில்லை கம்பீரம் 
வீணை !

விரல்களின் வித்தையால்
விளைந்திடும் இசை
வீணை !

மீட்டும் வரை
காத்திடும் அமைதி
வீணை !

மாமனிதர் கலாம் 
மனதிற்குப் பிடித்தது
வீணை !

கவலை மறக்க
காரணமாகும்
வீணை !

இசை நிகழ்ச்சிக்கு
சேர்க்கும் இனிமை
வீணை !

நெடிலில் தொடங்கும்
நிம்மதி வழங்கும்
வீணை !

மெய் மறக்க வைத்து
இசைக்கடலில் மூழ்டிக்கும்
வீணை !

உருவாக்கியவன் இசையை
ஒருநாளும் கேட்டதில்லை
வீணை !

இசைக்கருவிகளின்
சிகரம்
வீணை !

கருத்துகள்