பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! ஏர்முனை ! கவிஞர் இரா .இரவி !பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !

ஏர்முனை !  கவிஞர் இரா .இரவி !

மண்கள்  இடமாற்றம்
மேலும் கீழும்
ஏர்முனை !

நன்மை செய்திடும்
நல் ஆயுதம்
ஏர்முனை !

விவசாயத்தின்
முதுகெலும்பு
ஏர்முனை !

மண்ணை வளமாக்கும்
மகத்தான மருத்துவர்
ஏர்முனை !

அன்றும் இன்றும் என்றும்
உழவனின் தோழன்
ஏர்முனை !

உழுவதால் உழவன்
பெயர்க்காரணி
ஏர்முனை !

மண்தாளில் கவிதை
எழுதும் எழுதுகோல்
ஏர்முனை !

சகதி படிந்தாலும்
சந்தோசமாக உழைக்கும்
ஏர்முனை !

அமோக  விளைச்சலுக்கு  
முதல்படி
ஏர்முனை !

உயிர் எடுக்கும் வாள்முனை
உயிர் வளர்க்கும் உணவுக்கு
ஏர்முனை !

பொருட்படுத்தவில்லை
நிலத்தின் வழியை
ஏர்முனை !

போடும் கோலம்
நிலைப்பதில்லை
ஏர்முனை !நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்