பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி

பெண் எனும் பிரபஞ்சம்
கவிஞர் இரா. இரவி
அன்னையாய்! அக்காவாய்! தங்கையாய்! மனைவியாய்!
அன்பு மகளாய் பெண் எனும் பிரபஞ்சம்!
உலகிற்கு உயிர் வரக் காரணமானவள் அன்னை!
ஓடி விளையாடடி உடன் வளர்ந்தவள் அக்கா!
பாசம் காட்ட பரிவு காட்ட தங்கை
பாதியாக வாழ்வில் அங்கம் வகிப்பவள் மனைவி !
வாழ்வின் அர்த்தம் கற்பித்த அன்பு மகள்
வாழ்வாங்கு வாழ்ந்திடக் காரணம் பெண் எனும் துணையே!
பெண்கள் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்யவும்
பயமாக உள்ளது பேதலித்து விடுவோம்!
உயிர் வாழ உணவு தருவதும் பெண்
உலகை அழகாக மாற்றியதும் பெண் !
புரிந்து கொள்ள முடியாத புதிர் பெண்
புரிந்தது போல தெரியும் புரியாத பெண் !
ஆயிரம் உறவாக பெண்கள் இருந்தாலும்
அம்மா என்ற உறவுக்கு நிகர் எதுவுமில்லை!
பெண் இனத்தின் பெருமை அம்மா
பேரன்பின் சிகரம் பிரபஞ்ச அகரம் அம்மா !
கருவான நாள் முதல் கவனிப்பவள் அம்மா!
காற்றால் தூசி பட்டாலும் துடிப்பவள் அம்மா!
தாய்மொழியை இனிதே கற்பிப்பவள் அம்மா!
தரணியில் முதல் ஆசான் ஆனவள் அம்மா!
பாலோடு பாசமும் தந்து வளர்ப்பவள் அம்மா!
பார் போற்றும் பெருமையாக வளர்ப்பவள் அம்மா!
தன்னலம் மறந்து சேய் நலம் காப்பவள் அம்மா!
தன்னிகரில்லா தனிப்பெரும் உறவு அம்மா!
ஆற்றலின் இருப்பிடம் அன்பின் பிறப்பிடம் அம்மா!
அகிலம் போற்றும் அற்புத உறவு அம்மா!
பெண் எனும் பிரபஞ்சம் இன்றி
பிறக்க முடியாது உலகில் எந்த ஆணும்!
--

கருத்துகள்