ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

இன்சொல்  பேசினால்
சொர்க்கமாகும்
இல்லம் !

கவலை இல்லை
மது விலையேற்றம்
குடிமகன் !

அளவிற்கு மிஞ்சினால்
அலைபேசியும்
நஞ்சுதான் !

போதையின்
வகையில் சேர்ந்தது
அலைபேசி !

நன்மையும் உண்டு
தீமையும் உண்டு
இணையம் !

நம்பாதீர்
லாட்டரி அறிவிப்பு
அலைபேசியில் !

இருக்கட்டும்
ரகசியமாகவே
ரகசிய குறியீடு

தலைச்சுமையை விட
கனத்தது மனச்சுமை 
ஏழைக்கு !

கருத்துகள்