ஹைக்கூ உலா !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,
நூல் விமர்சனம் : உஷா முத்துராமன் பிளாட் எண் : 75/76, 4வது தெரு, சௌபாக்யா நகர், திருநகர் அஞ்சல், மதுரை – 625 006.
வெளியீடு :
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கம்120. விலை 80 ரூபாய் .
தொலைபேசி :
044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
நூல் விமர்சனம் : உஷா
முத்துராமன்
பிளாட் எண் : 75/76, 4வது தெரு, சௌபாக்யா நகர், திருநகர் அஞ்சல்,
மதுரை – 625 006.
******
13-12-2017
வணக்கம். தாங்கள் அனுப்பிய ‘ஹைக்கூ உலா’ புத்தகம் படித்து விட்டு
என் மனதில் தோன்றியதை கீழே எழுதி உள்ளேன்.
‘கவிதை என்றாலே இலக்கிய தமிழில் இருக்குமோ, புரியாதோ என்று
அச்சப்படுபவர்களின் அச்சத்தினை போக்க பிறந்தது தான் ‘ஹைக்கூ’ என்ற குழந்தை. இந்த
ஹைக்கூ கவிதைகளை ‘தன் திறமை’ மூலம் ‘ஹைக்கூ உலா’ என்ற புத்தகமாக நம் கைகளில் தவழச்
செய்த பெருமை கவிஞர் இரா. இரவி அவர்களைச் சாரும்.
அவருடைய ஒவ்வொரு தலைப்புகளை படித்ததுமே உள்ளே படிக்க வேண்டும் என்ற ஆர்வம்
வருவதில் வியப்பே இல்லை. ‘இயற்கை’,
‘மரங்கள்’, ‘மலர்கள்’ என்ற தலைப்பில் மரங்களின் பெயர்களுடன் அவற்றின் பலன்கள்
மற்றும் மலர்களின் வகையினை வரிசைப்படுத்தியதுடன் ‘மலர் வளையம்’, ‘மணமாலை’ என
மலர்கள் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தாற் போல போற்றப்படும் விபரங்களை
படித்தவுடன் ‘மல்லிகைப் பூ’ வாசம் நுகர்ந்தது போல ஓர் சுகந்தமான உணர்வு
ஏற்பட்டது.
சமூகத்தில் நகர மக்களை நகரா
மக்களாக்கிய ‘தொலைக்காட்சி’, பள்ளிக்கு செல்லும் சிறார் (மழலை) முதல் பல்லில்லா
முதியவர் வரை அனைவர் கையிலும் துள்ளி விளையாடும் ‘அலைபேசி’ என்று அதன் பாதிப்புகளை
கவித்துவத்துடன் சொல்ல ஒரு தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மை தன்னிடம் அதிகமாக
உள்ளது என்று ‘ஹைக்கூ’ மூலம் புரிய வைத்துள்ளார் கவிஞர் இரா. இரவி. உயிரை விட வைக்கும் ‘கந்து வட்டி’ பற்றி மிகத்
தெளிவாக எழுதியது அருமை.
மொத்தத்தில் இந்த ‘ஹைக்கூ உலா’ படிப்பதால் நம் மன
ஆரோக்கியம் பெற உதவும் ‘உடற்பயிற்சி உலா’ என்பதே பொருந்தும். வாழ்க! வளர்க!
*****
கருத்துகள்
கருத்துரையிடுக