என் முதல் கனவு!
கவிஞர் இரா. இரவி
மேல்நிலை இரண்டாம்
ஆண்டில் பள்ளியில்
முதல் மதிப்பெண் எடுத்து இருந்தேன் !
முதல் மதிப்பெண் எடுத்து இருந்தேன் !
தணிக்கைப் பாடத்தில்
இருநூற்றிற்கு
நூற்றி எண்பது எடுத்து இருந்தேன் !
நூற்றி எண்பது எடுத்து இருந்தேன் !
கணக்குப்பதிவியலில்
இருநூற்றிற்கு
நூற்றி எண்பது எடுத்து இருந்தேன் !
நூற்றி எண்பது எடுத்து இருந்தேன் !
வணிகவியல் பட்டம்
பயின்று பின்
வளமான தணிக்கையராவது கனவாக இருந்தது !
வளமான தணிக்கையராவது கனவாக இருந்தது !
குடும்ப சூழ்நிலையின்
காரணமாக எனக்கு
கல்லூரி வாழ்க்கை இல்லாமல் போனது !
கல்லூரி வாழ்க்கை இல்லாமல் போனது !
வேலைக்குச் செல்லும்
நிலைமை வந்தது
வணிகவியில் அஞ்சல் வழியில் பயின்றேன் !
வணிகவியில் அஞ்சல் வழியில் பயின்றேன் !
கல்லூரி வாழ்க்கை
இல்லாமல் போன
கவலை நெஞ்சின் ஓரத்தில் இருந்தது !
கவலை நெஞ்சின் ஓரத்தில் இருந்தது !
வடுவாக இருந்திட்டக்
கவலை நீங்கிட
வாய்ப்பாக என் ஹைக்கூ பாடமானது !
வாய்ப்பாக என் ஹைக்கூ பாடமானது !
திருச்சி பாரதிதாசன்
பல்கலைக்கழகத்திலும்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் !
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் !
பாடநூலில் ஹைக்கூ
இடம் பெற்றன
பாதித்த மனதிற்கு ஆறுதலாக அமைந்தது !
பாதித்த மனதிற்கு ஆறுதலாக அமைந்தது !
வன்னியப்பெருமாள்
மகளிர் கல்லூரியிலும்
வைகைஓரத்து தியாகராசர் கல்லூரியிலும் !
வைகைஓரத்து தியாகராசர் கல்லூரியிலும் !
திருச்சி புனித மரியன்னை
பெண்கள் கல்லூரியிலும்
தரமான ஹைக்கூக்கள் இடம் பெற்றன !
தரமான ஹைக்கூக்கள் இடம் பெற்றன !
எனது மகன்
பிரபாகரனுக்கு பாடநூலில்
என் ஹைக்கூ மனப்பாடப் பகுதியில் வந்தது !
என் ஹைக்கூ மனப்பாடப் பகுதியில் வந்தது !
தணிக்கையர் ஆகும்
கனவு தகர்ந்திட்ட போதும்
தன்னிகரில்லாப் பெருமைகள் வந்து சேர்ந்தன!
தன்னிகரில்லாப் பெருமைகள் வந்து சேர்ந்தன!
கவிதை ரசிகர்கள் பலரும் வரவேற்றனர்!
கருத்துகள்
கருத்துரையிடுக