என் முதல் கனவு ! கவிஞர் இரா .இரவி !

http://www.dinamani.com/specials/kavithaimani/2017/nov/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2814829.html


என்  முதல் கனவு ! கவிஞர் இரா .இரவி !

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்
இனிய சமதரும சமுதாயம் என்  முதல் கனவு !

இருப்பவன் இல்லாதவன் என்ற நிலையின்றி
ஏற்றத் தாழ்வுகள் இன்றி சமநிலை !

அடிப்படைத் தேவைகள் என்பதை
அரசே  வழங்கி விடும் மக்களுக்கு !

தனியார் உடைமை எதுவுமின்றி
தரணியில் பொதுவுடைமை வேண்டும் !

கோடிகளைப்  பதுக்குவோர் இல்லை
கொடிகளுக்கு வேலை இல்லை !

செல்வக் கொழிப்பும் இல்லை
செல்வாக்குகளும் இல்லை !

ஏழை பணக்காரன் இல்லை
எல்லோருக்கும் சமநிலை !

மாட மாளிகையும் இல்லை
ஓலைக் குடிசையும் இல்லை !

பசியும் பட்டினியும் இல்லை
பணக்கார ஆணவம் இல்லை !

கந்து வட்டி இல்லவே இல்லை
கொலை தற்கொலையும் இல்லை !

கல்வியிலும் ஏற்றத் தாழ்வு இல்லை
கல்வி அனைவருக்கும் சமமாக !

சாதி மதம் இல்லவே இல்லை
சாதி மத சண்டையும் இல்லை !

அனைவருக்கும் சம வாழ்வு
அன்பு இருக்கும்  நிறைவாழ்வு  !

கருத்துகள்