http://www.dinamani.com/ specials/kavithaimani/2017/ nov/11/%E0%AE%89%E0%AE%A9%E0% AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0% AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0% AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF% 8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2% E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5% E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0% AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0% AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0% AE%B5%E0%AE%BF--2805994.html
--
உன் குரல் கேட்டால் ! கவிஞர் இரா .இரவி !
உன் குரல் கேட்டால் நான் திரும்பவும்
உயிர்த்தெழுவேன் உயரம் தொடுவேன் !
அலைபேசியில் ஒலி வரும்போதெல்லாம்
அழைப்பது நீயோ என்று எடுப்பேன் !
எடுக்கும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே
எனக்கு மிஞ்சியது ஏக்கமே எஞ்சியது !
நான் உன்னை அழைத்துப் பேசலாமென்றால்
நின் எண் என் வசம் இல்லை ஆனால் !
உன்னிடம் உண்டு எனது எண்
நீ நினைத்தால் ஒரே ஒரு முறை !
மறக்க நினைத்தாலும் முடிவதில்லை
மனதில் நினைவுகள் வந்து மோதுகின்றன !
மூச்சு உள்ளவரை உன் நினைவு
மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் !
பசுமையான நினைவுகள் எனக்கு
பகலிலும் வந்து போகின்றன !
கல் நெஞ்சம் கேள்விப் பட்டதுண்டு
கள்ளி உனக்கோ இரும்பு நெஞ்சம் !
இரும்பு கூட தீயிலிட்டால் வளையும்
என்னவளே நீ எப்போது வளைவாய் !
என்றாவது நீ அலைபேசியில் அழைப்பாய்
என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு !
இரக்கம் கொண்டு என்னை அழைக்கலாம்
ஒரே ஒரு முறை அழைத்திடுவாய் !
ஒரே ஒரு முறை உன் குரல் கேட்டால்
உள்ளமும் உடலும் பூரிப்பு அடையும் !
.
கருத்துகள்
கருத்துரையிடுக