கந்துவட்டி ! கவிஞர் இரா .இரவி !



கந்துவட்டி !   கவிஞர் இரா .இரவி !

அசலை விட கூடுதலாக
வட்டி செலுத்தினாலும்
அப்படியே அசல் !

வட்டி செலுத்தாவிட்டால்
வட்டிக்கு வட்டி உண்டு
கந்துவட்டி !

காலையில் நூறு தந்தால்
மாலையில் நூற்றிபத்து 
கந்துவட்டி !

தொலைக்காட்சித் தொடர் போல
தொடரும் முடிவின்றி
கந்துவட்டி !

ஏழைகளை
பரம ஏழையாக்கும்
கந்துவட்டி !

ஏச்சும் பேச்சும்
ஏளனமும் உண்டு
கந்துவட்டி !

போக வழியுண்டு
திரும்ப வழியில்லை
கந்துவட்டி !

பிடியில்
உடும்பு தோற்கும்
கந்துவட்டி !

தற்கொலைகளின் காரணி
நடப்பதுண்டு கொலைகளும்
கந்துவட்டி !

தெரியாது
மனிதாபிமானம்
கந்துவட்டி !

பொருத்தமான பெயர்தான்
ஈட்டிக்காரன்
கந்துவட்டி !

நம்புவார்கள் கடவுளை
நம்பமாட்டார்கள் பாவத்தை
கந்துவட்டி !

வழியில் சிக்கிய
மீனாக ஏழைகள்
கந்துவட்டி !

இடமில்லை
இரக்கம் கருணை
கந்துவட்டி !

வட்டியும்
குட்டிப்போடும்
கந்துவட்டி !

கருத்துகள்