படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ ! கௌந்தி மு ! சென்னை !
கூண்டில் புலி
சுதந்திரமாய்
மக்கள் கூட்டம் !
கோவில் கோபுரம்
மிதிபடுகிறது
மழை நீரில் பிம்பம் !
ஓட்டப்பந்தயம்
தோற்றுகொண்டே இருக்கிறது
மணிமுள் !
கல்லறை
தனித்துச்செல்கிறது
பயந்தவன் பிணம் !
மழைக்காலம்
சிதறிக்கிடக்கிறது
ஈசல் இறகு !
சுற்றிக்களைத்ததும்
விழுந்து விடுகிறது
பம்பரம் !
பேனாவிற்குள்
அடைப்பட்டு கிடக்கிறது
எழுத்துக்கள் !
வறண்ட நிலம்
பசுமையாய் இருக்கிறது
கருவேலம் !
பலசாலி முதுகு
கூன்வளைகிறது
தெருவில் பணம் !
கருத்துகள்
கருத்துரையிடுக