மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !




மாமதுரைக்  கவிஞர்  பேரவையின்  தலைவர் 
சி  .வீரபாண்டியத்  தென்னவன் அவர்கள்  தந்த  தலைப்பு !

தமிழ்காக்கக்  கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !

தரணியில் முதல்மொழி நம் தமிழ்மொழி
தரணி போற்றிடும் தன்னிகரில்லா மொழி!

தமிழை அமுதென்றும் அமுதே தமிழென்றும்
தன்னிகரில்லாக் கவிஞர்கள் பாடி உள்ளனர்!

சொற்களின் சுரங்கம் நமது தமிழ்மொழி
சொக்க வைக்கும் ஒலிப்பு தமிழ்மொழி !

உலகமொழி ஆங்கிலத்திலும் பல சொற்கள்
உள்ளன தமிழ்ச்சொற்கள் அறிந்திடுவீர் !

பல்லாயிரம் வயதான மொழி பைந்தமிழ்
பண்ணிசை முதலில் ஒலித்ததும் தமிழ்மொழியே!

உலக மொழிகளின் மூத்தமொழி தமிழ்மொழி
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி !

உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்மொழி
உணர்வினை ஊட்டிடும் உன்னதம் தமிழ்மொழி !

உயிரெழுத்து மெய்எழுத்து உயிர்மெய் எழுத்தென
ஒப்பற்ற எழுத்துக்களைக் கொண்டது தமிழ்மொழி !

சங்கம் வைத்து வளர்த்த மொழி தமிழ்மொழி
சங்கப்பாடல்கள் தந்த மொழி தமிழ்மொழி !

இலக்கண இலக்கியம் உள்ளமொழி தமிழ்மொழி
ஈடில்லாப் பெருமைகள் பெற்றமொழி தமிழ்மொழி !

உலக அறிஞர்கள் போற்றியமொழி தமிழ்மொழி
உலகிற்கு பண்பாடு பயிற்றுவித்த மொழி தமிழ்மொழி !

செம்மொழி எம்மொழி சிறந்தமொழி தமிழ்மொழி
செந்தமிழ் நாட்டின் தாய்மொழி தமிழ்மொழி !

காப்பியங்கள் காவியங்கள் உள்ள மொழி தமிழ்மொழி
கற்கண்டாய பேசி இனித்திடும் மொழி தமிழ்மொழி !

பன்மொழி அறிஞன் பாரதி பாட்டில் பாடினான்
பைந்தமிழ் மொழி போல இனியது இல்லை என்றான் !

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆராய்ந்தபின்
மொழிந்தார் தமிழ்மொழியே முதல்மொழி என்று !

முதல்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட
மண்ணின் மைந்தர்கள் பெருமை கொள்வோம்!

தமிழ்காக்கக்  கொட்டு முரசே கொட்டு
தமிழே முதல் மொழியென்று கொட்டு முரசே !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்