ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

காண்பதும் பொய் 
நீரல்ல 
கானல் நீர் !

இழந்து வருகின்றன 
நல்மதிப்பை 
நீதிமன்றங்கள் !

முயற்சி செய் 
நூறு முறை 
பத்துமுறை வெல்ல !

செய்து பின் வருந்துவதைவிட 
செய்யாதிருப்பது நன்று 
தவறு !

கேடு தரும் 
உள்ளத்திற்கும் உடலுக்கும் 
பொறாமை !

உடன் உரைத்திடுக 
பெற்ற உதவிக்கு 
நன்றி !

உன்னைப்போலவே 
பிறரையும் 
மதி !

கொல்லைப்புறமாக 
குலக்கல்வி அமுல் 
நீட் தேர்வு !

மருத்துவக்கல்வி 
ஏழைக்கு எட்டாக்கனி 
நீட் தேர்வு !

பெயர்மாற்றம் 
தொலைக்காட்சியன்று 
தொல்லைக்காட்சி !

கொலை கொள்ளை 
இல்லாத நாளில்லை 
செய்தித்தாள் !

வீணடிப்பு 
தாளும் நேரமும் 
ராசிபலன் !  

வாழ்கிறது 
கணினியுகத்திலும் 
காந்தியம் !

அமைதி பூங்காவாக 
தமிழகம் 
பெரியார் பிறந்ததால் !

சர்வசக்தி பிள்ளையார்
கரைக்கையில்   
உயிரிழப்பு ?

கறுப்புப்பணம் ஒழிப்பதாக 
கோடிகள் விரையம் 
புதுப்பணம் அச்சடிப்பு !

சின்ன மீன் போட்டு 
சுறா மீன் அபகரிப்பு 
அரசியல் !

கருத்துகள்