ஆசை ! கவிஞர் இரா .இரவி !

ஆசை ! கவிஞர் இரா .இரவி ! 

பொருள் மீதான ஆசை 
திருட்டு 
கைவிலங்கு ! 

பொன் மீதான ஆசை 
தவறான வழி 
தடுக்கி விழுந்தனர் ! 

மது மீதான ஆசை 
உயிர் பறித்தது 
மனிதனை ! 

மாது மீதான ஆசை 
சபலம் சஞ்சலம் 
உயிர்க்கொல்லி நோய் ! 

பணத்தின் மீதான ஆசை 
வழிவகுத்தது ஊழல் 
சிறை ! 

புகழ் மீதான ஆசை 
விளம்பரம் 
விவகாரம் ! 

புழு மீதான ஆசை 
சிக்க வைத்தது 
மீனை ! 

வடை மீதான ஆசை 
மாட்ட வைத்தது 
எலியை ! 

ஆசையே அழிவுக்குக் காரணம் 
அன்றே உரைத்தார் 
புத்தர் !

கருத்துகள்