ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வேண்டாம் மழை
வேண்டினான் விவசாயி
அறுவடை நாள் !
ஏமாற்றுதல்
புதிய சொல்
உலகமயம் !
பாதாளம் தள்ளுதல்
புதிய சொல்
தாராளமயம் !
ஏழைகளுக்கு
இன்னல்
புதிய பொருளாதாரம் !
எளிய வழி
கவலை மறக்க
கவிதை !
சிறிய வேறுபாடு
நான் திறமைசாலி தன்னம்பிக்கை
நானே திறமைசாலி ஆணவம் !
வாழ்வியல் தத்துவம்
அகந்தை அழிக்கும்
அன்பு உயர்த்தும் !
சிரமம் இல்லை
சிகரம் அடைவது
முயற்சியே முக்கியம் !
அரசிடம் தொடங்கி
மக்கள் வரை தொடர்வது
பற்றக்குறை !
சில நிமிடம் வாழ்கின்றன
நீரைப் பிரிந்த பின்னும்
மீன்கள் !
பாதுகாப்பு என்பதால்
பாரத்திற்கு வருந்தவில்லை
ஆமை !
கொடிய விசம்
பெயரோ
நல்ல பாம்பு !
கொள்கைக்காக அன்று
கோடிகளுக்காக இன்று
கூட்டணி !
இதயேந்திரனின் தொடக்கம்
இனிதே தொடர்கின்றது
உடல் தானம் !
வீணாக்காது வழங்கிடுக
வேண்டும் விழிப்புணர்வு
விழிகள் தானம் !
.
வேண்டாம் மழை
வேண்டினான் விவசாயி
அறுவடை நாள் !
ஏமாற்றுதல்
புதிய சொல்
உலகமயம் !
பாதாளம் தள்ளுதல்
புதிய சொல்
தாராளமயம் !
ஏழைகளுக்கு
இன்னல்
புதிய பொருளாதாரம் !
எளிய வழி
கவலை மறக்க
கவிதை !
சிறிய வேறுபாடு
நான் திறமைசாலி தன்னம்பிக்கை
நானே திறமைசாலி ஆணவம் !
வாழ்வியல் தத்துவம்
அகந்தை அழிக்கும்
அன்பு உயர்த்தும் !
சிரமம் இல்லை
சிகரம் அடைவது
முயற்சியே முக்கியம் !
அரசிடம் தொடங்கி
மக்கள் வரை தொடர்வது
பற்றக்குறை !
சில நிமிடம் வாழ்கின்றன
நீரைப் பிரிந்த பின்னும்
மீன்கள் !
பாதுகாப்பு என்பதால்
பாரத்திற்கு வருந்தவில்லை
ஆமை !
கொடிய விசம்
பெயரோ
நல்ல பாம்பு !
கொள்கைக்காக அன்று
கோடிகளுக்காக இன்று
கூட்டணி !
இதயேந்திரனின் தொடக்கம்
இனிதே தொடர்கின்றது
உடல் தானம் !
வீணாக்காது வழங்கிடுக
வேண்டும் விழிப்புணர்வு
விழிகள் தானம் !
.
கருத்துகள்
கருத்துரையிடுக