ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 



முதல் மொழி மட்டுமல்ல 
முதன்மை மொழி 
தமிழ் ! 

உலகம் முழுவதும் 
ஒலிக்கும் மொழி 
தமிழ் ! 

மனஇருள் 
விரட்டிடும் விளக்கு 
திருக்குறள் ! 

எரிந்து கருகினாலும் 
விளக்கேற்றிய மகிழ்வு 
தீக்குச்சி ! 

உருகி வழிந்தாலும் 
ஒளி தந்த மகிழ்வு 
மெழுகு ! 

அவிழ்த்து விட்ட கூந்தலில் 
முடிந்து விட்டாள் 
மனதை ! 

நல்லவனுக்கு 
ஆயுதம் 
உண்மை ! 

தொட்டால் 
கெட்டாய் 
மது ! 

காரணமாகின்றது 
காதல் முறிவிற்கு 
பொய் ! 

வீட்டில் எலி 
வெளியில் புலி 
பிரபலங்கள் ! 

வழிவகுக்கும் 
அழிவிற்கு 
ஆடம்பரம் ! 

நெடுநாளாகி விட்டது 
நேர்மை நீதி விலகி 
அரசியல் ! 

புரட்டர்களின் வெற்றி 
நிரந்தரமன்று 
புரட்டி விடும் ! 

பெருகப் பெருக 
அழிவும் பெருகும் 
நெகிழி ! 

அகம் புறம் 
தூய்மையானால் 
இனிக்கும் வாழ்க்கை ! 

வெறுத்தாள் திருமணத்தை 
முதிர்கன்னி 
வரதட்சணை ! 

கருத்துகள்