ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
அருகே மான்
விரட்டவில்லை புலி
பசியில்லை !
தினம்
ஒரு தோற்றம்
நிலவு !
சுற்றாத சூரியன் சுற்றுவதாய்
சுற்றும் பூமி சுற்றாததாய்
புலப்படும் பொய்யாக !
கணக்குப் பார்த்தான்
உழுதவன்
நட்டமோ நட்டம் !
சம்பாதித்தாலும்
தருவதில்லை சமஉரிமை
மனைவிக்கு !
மழைநீர் சேகரித்த வீட்டில்
வற்றவில்லை
நிலத்தடி நீர் !
தொட்டியையும் ஆட்டி
பிள்ளையையும் கிள்ளும்
அரசியல்வாதிகள் !
அமைச்சர் அறிவிப்பு
குறைந்தது விலைவாசி
70 ஐ தாண்டியது பெட்ரோல் !
.
காபிக்கும் வரி
தேநீருக்கும் வரி
வாழ்க இந்தியா !
எல்லோரும்
மவுனமாக இருங்கள்
பிறக்கும் புதிய இந்தியா !
புரியவில்லை
புத்தரின் போதனை
அரசியல்வாதிகளுக்கு !
மெய்ப்பித்தனர்
பேராசை பெருநட்டம்
அரசியல்வாதிகள் !
பாதியில் பழுதானது
பாரதத்தின் பீரங்கி
வேண்டாம் போர் !
மனிதகுலத்தை அழிக்கும்
மோசமான சொல்
போர் !
கருத்துகள்
கருத்துரையிடுக