ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

வேதனையில் விவசாயி 
உடைத்தனர் சாலையில் 
திருஷ்டி பூசணி ! 

பொருள் தருவதை விட 
புத்தகம் தருவது மேல் 
நண்பனுக்கு ! 

பணத்தால் வருவதல்ல 
மனத்தால் வருவது 
இன்பம் ! 

வாய்ப்பு வழங்கினால் 
வலம்வருவர் வானிலும் 
பெண்கள் ! 

சாம்பார் இன்றி 
ரசம் வந்தது 
விலை ஏற்றம் ! 

மடமையின் உச்சம் 
மனிதன் கொலை 
மாட்டிற்காக ! 

வேண்டாம் அவமரியாதை 
வேண்டும் மரியாதை 
முதுமைக்கு !

கருத்துகள்