தொண்டு உள்ளம் கவிஞர் இரா. இரவி

தொண்டு உள்ளம்
கவிஞர் இரா. இரவி
தொண்டு உள்ளம் என்று படித்ததும்
உள்ளம் நினைத்தது அன்னை தெரசாவை !
தொழு நோயாளிகளிடம் அன்பு செலுத்தினார்
தொழுவதை விடச் சிறந்தது தொண்டு உணர்த்தினார் !
இருகரம் கூப்பி வணங்குவதை விடச் சிறந்தது
ஒரு கரத்தால் கண்ணீரைத் துடைப்பது !
தனக்காக வாழ்பவன் சாதாரண மனிதன்
பிறருக்காக வாழ்பவனே சாதனை மனிதன் !
இறந்த பின்னும் மக்கள் உள்ளங்களில் வாழ்வான்
உடலுக்கு அழிவுண்டு புகழுக்கு அழிவில்லை !
தொண்டு செய்து பழுத்த பழம் தந்தை பெரியார்
தன்மானத்தை தமிழருக்குக் கற்பித்த ஆசான் பெரியார் !
மக்களுக்காக வாழ்ந்து சிறந்தவர் காமராசர்
மக்கள் மனங்களில் வாழக் காரணம் அவர் தொண்டு !
மணமுடிக்காமல் மக்களுக்கு தொண்டு செய்தார்
மாடமாளிகை கட்டாமல் எளிமையாக வாழ்ந்தார் !
ஊழல் என்பதை என்றும் அறியாதவர் காமராசர்
ஊருக்காகவே உழைத்து உழைத்து தேய்ந்தவர் !
காமராசர் காலம் தமிழகத்தின் பொற்காலம்
காமராசர் காலமானதால் காலமானது பொற்காலம் !
கல்வியில் புரட்சியை விதைத்தவர் காமராசர்
கல்வியோடு மதிய உணவௌம் தந்திட்ட மகராசர் !
தொண்டு செய்து வாழ்ந்திட்ட நல்லவர்கள்
தொன்று தொட்டு என்றும் நினைக்கப்படுவார்கள் !
இருப்பதை பகிர்ந்துண்டு வாழ்வது சிறப்பு
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உரைத்தவர் வள்ளுவர் !
தானத்தில் சிறந்தது ரத்ததானம் இன்று
தானம் தந்த தொண்டுள்ளங்களுக்கு நன்றி !
கண் தானம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்
கண்களை மண்ணுக்கும் தீயுக்கும் தர வேண்டாம் !
மனிதாபிமானத்தின் மகுடந்தான் தொண்டுள்ளம்
மனிதர்கள் அனைவருக்கும் வேண்டும் தொண்டுள்ளம் !
தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று
தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
சக மனிதனுக்கு உதவி செய்வதே வாழ்க்கை
சராசரி வாழ்க்கைக்கு முடிவு கட்ட வேண்டும் !
வறியவருக்கு உதவிடும் உள்ளம் வேண்டும்
வலிய சென்று உதவிடும் எண்ணம் வேண்டும் !
மற்றவரின் துன்பம் துடைத்திட வேண்டும்
மற்றவரை மதித்து உதவிட வேண்டும் !
விலங்குகள் கூட உதவி செய்து வாழ்கின்றன
வீணே சண்டையிட்டு வீழ்ந்து வருகிறான் மனிதன் !
பறவைகள் கூட கூடி ஒற்றுமையாய் வாழ்கின்றன
போதையில் பாதை தவறி வீழ்கிறான் மனிதன் !
அன்னை தெரசா அளவிற்கு தொண்டு செய்யாவிடினும்
அடுத்த வீட்டுக்காரருக்காவது தொண்டு செய் !
காமராசர் அளவிற்கு தொண்டு செய்யாவிடினும்
கண்ணில் பட்டவர்களுக்குத் தொண்டு செய் ! 

கருத்துகள்