ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

வியர்ப்பதே இல்லை 
எவ்வளவு ஓடினாலும் 
எலி ! 

தொழில்நுட்பம் கற்பிக்கும் 
குருவாகின்றான் 
மகன் ! 

நேரமில்லை பொய் 
மனமில்லை உண்மை 
சாதிக்க ! 

அழுகுக்காடை சுமக்க வருத்தமில்லை 
சுத்தாடை சுமக்க கர்வமில்லை 
கழுதை! 

உலகில் 
ஒருவருமில்லை 
கவலையற்றோர் ! 

சிரிக்கின்றன 
பிணத்தின் மீதிருந்தும் 
மலர்கள் ! 

களவாடுகின்றான் 
கதிரவன் 
மலர்களில் பனித்துளிகள் ! 

எரிச்சலூட்டியபோதும் நன்றி 
உணவு கிடைக்கின்றது 
விளம்பர இடைவெளி ! 

வன்மம் கற்பிக்கும் 
பாடசாலை 
தொலைக்காட்சித் தொடர்கள் ! 

பூவே 
பூ சூடியது 
என்னவள் ! 

வேண்டவே வேண்டாம் 
மிகக் கொடியது 
கோபம் ! 

உடற்பயிற்சியின் இராசா 
உடல்நலம் காக்கும் 
நடைப்பயிற்சி ! 

வேண்டா வெறுப்பாக வேண்டாம் 
விரும்பி செய்வோம் 
விவசாயம் ! 

கல் சிலையானது 
சிற்பியின் 
சிந்தையால் !

கருத்துகள்