மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !


மதுக்கடை !  கவிஞர் இரா .இரவி !

எல்லா சாலைகளும் 
முடியுமிடம்  
மதுக்கடை ! 

நண்பனாகச் சென்று 
பகைவனாகத் திரும்புமிடம் 
மதுக்கடை ! 

ஆறறிவோடு சென்று 
ஐந்தறிவாகி வருமிடம் 
மதுக்கடை ! 

பொதுவுடைமை பேசி 
தனியுடைமைச் சண்டை 
மதுக்கடை ! 

கொள்ளையடித்தப்   பணம் 
தண்ணியாகக் கரையுமிடம் 
மதுக்கடை ! 

திருடியப்  பணம் 
தண்ணியாகக் கரையுமிடம் 
மதுக்கடை ! 

உழைத்திட்டக் கூலியும்
குவியுமிடம் 
மதுக்கடை ! 

திருவிழாக் கூட்டமென 
தினமும் கூட்டம் 
மதுக்கடை ! 
.
எண்ணிக்கை குறைந்தாலும் 
விற்பனை குறையவில்லை 
மதுக்கடை ! 

விலைகள் கூடினாலும் 
குடிப்பது குறையவில்லை 
மதுக்கடை ! 

விற்பனை  செய்திட 
உண்டு இலக்கு 
மதுக்கடை ! 

சொல்லமுடியாது கடன்
சொன்னாலும் ஏற்பதில்லை 
மதுக்கடை ! 

வயது வேறுபாடின்றி 
கூடுகிறது கூட்டம் 
மதுக்கடை ! 

செல்ல பயந்தனர் அன்று 
பயமில்லை இன்று 
மதுக்கடை ! 

பஞ்சம் இல்லை பணத்திற்கு 
பஞ்சம் உண்டு குணத்திற்கு 
மதுக்கடை ! 

தமிழகப் பெண்களின் 
தாக்குதலுக்காகுமிடம்   
மதுக்கடை ! 

காந்தி இருந்தால் 
கண்ணீர் வடிப்பார்
மதுக்கடை ! 

அன்று சிறுபான்மை   
இன்று பெரும்பான்மை  
குடிமகன்கள் !

கருத்துகள்