ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மதித்தால்
மதிக்கும்
குழந்தை !
உடலில் இருக்கலாம்
உள்ளத்தில் இல்லை அழுக்கு
உழைப்பாளி !
உருவாக்கும்
முன்னேற்றம்
மனஎழுச்சி !
விதைத்தால்தான் முளைக்கும்
நினைத்தால்தான் நடக்கும்
வாழ்க்கை !
பிறருக்காக வாழ்
இறந்த பின்னும்
வாழ்வாய் !
சிந்தித்துப் பார்
பகையாளி மனநிலையில்
விலகும் பகை !
சுவர் இன்றி
சித்திரம் உண்டு
காகிதத்தில் !
காலம் கடந்து விழித்தால்
காலம் கடந்துதான் விடியும்
வாழ்க்கை !
அஞ்சாதே
அஞ்சினால் கூடும்
துன்பம் !
முடியாததை முடித்திடும்
நடக்காததை நடத்திடும்
நட்பு !
வீணாக்குகின்றான் சோம்பேறி
விவேகமாக்குகின்றான் அறிவாளி
நேரம் !
பாராட்டுக
திறமை இருந்தால்
பகைவனையும் !
மதித்தால்
மதிக்கும்
குழந்தை !
உடலில் இருக்கலாம்
உள்ளத்தில் இல்லை அழுக்கு
உழைப்பாளி !
உருவாக்கும்
முன்னேற்றம்
மனஎழுச்சி !
விதைத்தால்தான் முளைக்கும்
நினைத்தால்தான் நடக்கும்
வாழ்க்கை !
பிறருக்காக வாழ்
இறந்த பின்னும்
வாழ்வாய் !
சிந்தித்துப் பார்
பகையாளி மனநிலையில்
விலகும் பகை !
சுவர் இன்றி
சித்திரம் உண்டு
காகிதத்தில் !
காலம் கடந்து விழித்தால்
காலம் கடந்துதான் விடியும்
வாழ்க்கை !
அஞ்சாதே
அஞ்சினால் கூடும்
துன்பம் !
முடியாததை முடித்திடும்
நடக்காததை நடத்திடும்
நட்பு !
வீணாக்குகின்றான் சோம்பேறி
விவேகமாக்குகின்றான் அறிவாளி
நேரம் !
பாராட்டுக
திறமை இருந்தால்
பகைவனையும் !
கருத்துகள்
கருத்துரையிடுக