ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி ! 

செத்துப் போனது 
சாதி மத பேதம் 
மழை வெள்ளம் ! 

மரிக்கவில்லை மனிதநேயம் 
மெய்ப்பித்தது 
மழை ! 

கொண்டாடு 
திருவிழா போல 
வாழ்க்கை ! 

முடிந்து விடுகிறது 
தோற்றம் மறைவோடு 
சராசரி வாழ்க்கை ! 

நண்பன் இல்லாவிடினும் 
பகைவன் இன்றி வாழ் 
இனிக்கும் வாழ்க்கை ! 

பெண் பிறந்தால் 
பேதலிக்கும் 
பெண்கள் ? 

உலகிற்கு உழைத்தவனும் 
இளைத்தவனும் 
தமிழன் ! 

கைரேகையில் இல்லை 
கைகளில் உள்ளது 
எதிர்காலம் ! 

இன்பத்தின் காரணி 
பணமன்று 
மனம் ! 

வழிவகுக்கும் 
மன நிம்மதிக்கு 
மவுனம் ! 

பெரிய மனிதர்களின் 
சிறந்த பண்பு 
விட்டுக் கொடுத்தல் ! 

உறுதியாகின்றது 
உழைப்பாளிக்கு 
உறக்கம் ! 

அரிதிலும் அரிது 
கணவனைப் பாராட்டும் 
மனைவி ! 

வரலாம் தோல்வி 
இறுதி வெற்றி 
உண்மைக்கே ! 

அறியவில்லை யாரும் 
அவள் அழுததை 
மழை ! 

நல்ல கனவு 
கலைத்தது 
கொசு ! 

பிடிக்காமல் ரசியுங்கள் 
பார்ப்பதே பரவசம் 
பட்டாம் பூச்சி !

கருத்துகள்