ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

தங்கக்கூண்டு வேண்டாம்
தங்க கூண்டு போதும்
காதலர்களுக்கு !

இயற்கையின்
இனிய கொடைகள்
வண்ணங்கள் !

மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள் !

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை !

ஈடு இணை இல்லை
இன்பத்தின் எல்லை
காதல் உணர்வு !


அளவிற்கு அதிகமானால்
ஆபத்து
பணமும் காற்றும் !

யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
சந்திக்கும்போது
பிரிந்த காதலர்கள் !

அன்று பாசத்தால்
இன்று பணத்தால்
உறவுகள் !

புலியைக்கண்ட மானாக
வேட்பாளரைக் கண்ட
வாக்காளர் !

கருத்துகள்