குழந்தை ! கவிஞர் இரா .இரவி !




குழந்தை !     கவிஞர் இரா .இரவி !

தொட்டில் ஆட்டியவள்
தூங்கினாள்
தூங்கவில்லை   குழந்தை !

சிரிப்பை ரசிக்க 
காணாமல்போகும் கவலை
குழந்தை !

பிழை இருந்தாலும் 
பேச்சு இனிமை 
குழந்தை !

எதிர் கேள்வி கேட்டது 
சொன்ன கதைக்கு 
குழந்தை !

தெரியாது வேறுபாடு 
அறியாது ஏற்றத்தாழ்வு 
குழந்தை !

வயது குறைவுதான் 
பொம்மைக்கு  அம்மாதான் 
குழந்தை !

ஓடி விளையாடும் 
ஆடி மகிழும் 
குழந்தை !

தொற்றிக்  கொள்ளும்
குதூகலம் 
குழந்தை !

கள்ளம் கபடமின்றி 
கொள்ளையடிக்கும் உள்ளம்
குழந்தை !

விலங்குகளை விரும்பும் 
பறவைகளை நேசிக்கும் 
குழந்தை !

சூது வாது தெரியாது 
சொக்க வைக்கும் அழகு 
குழந்தை !

நிலவைப் பார்த்து உண்ணும் 
நிலவென மின்னும் 
குழந்தை !

மெய்   சொல்லும் 
பொய்  சொல்லாது 
குழந்தை !

பயம் அறியாது 
பாசம் அறியும் 
குழந்தை !

கருத்துகள்