ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

இயற்கை எழுதிய கவிதையில்
எழுத்துப்பிழைகள்
திருநங்கைகள் !

உணர்த்தியது
பசியின் கொடுமை
நோன்பு !

வக்கிரம் வளர்க்கும்
வஞ்சனைத் தொடர்கள்
தொலைக்காட்சிகளில் !

ஆணி அடித்து
ரணப்படுத்தி விளம்பரம்
சாலையோர மரங்களில் !

படமே இல்லை
உதவியது விளம்பரம்
முன்னாள் நடிகைக்கு !

புகைப் பிடிக்கின்றதோ ?
மலை
வான் மேகம் !

கண்ணால்
காண்பதும் பொய்
மலையை முத்தமிடும் வானம் !

ஒழித்து விடு
பொன்னாசை பட்டாசை
நிரந்தரம் நிம்மதி !

விரயமாவதைப் பயன்படுத்திடு
விவேகமாக வளரந்திடு
சூரிய சக்தி !

கருத்துகள்