ஆகலாம் கலாம் !
கவிஞர் இரா. இரவி
மாணவ மாணவியரிடம் அன்பு செலுத்தி
மனித நேயம் விதைத்தால் ஆகலாம் கலாம் !
சக மனிதனின் கருத்துக்கு மதிப்பளித்து
சகோதரனாய் நினைத்தால் ஆகலாம் கலாம் !
ஏழ்மைக்கு வருந்தாமல் உழைத்தால்
எல்லோரும் ஆகலாம் கலாம் !
மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டால்
மண்ணில் அனைவரும் ஆகலாம் கலாம் !
குழந்தையைப் போல உள்ளம் கொண்ட
குவலயத்தில் எல்லோரும் ஆகலாம் கலாம் !
ஆடம்பரத்தை வெறுத்து எளிமையை
அனைத்திலும் கடைபிடித்தால் ஆகலாம் கலாம் !
தலைக்கனம் இன்றி அனைவரிடமும்
தன்மையாக நடந்தால் ஆகலாம் கலாம் !
உயர்பதவி அடைந்த போதும் என்றும்
உள்ளத்தில் செருக்கின்றி வாழ்ந்தால் ஆகலாம் !
வாய்மை, நேர்மை, உண்மை மூன்றும் இருந்தால்
வையகத்தில் நீங்களும் ஆகலாம் கலாம் !
திருக்குறள் படிப்பதோடு நின்று விடாமல்
திருக்குறள் வழி வாழ்ந்தால் ஆகலாம் கலாம் !
கருத்துகள்
கருத்துரையிடுக