காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !

காவியக் கவிஞர் வாலியே !   கவிஞர் இரா .இரவி !

காவியக் கவிஞர் வாலியே !
உந்தன் மரணம் எங்களுக்கு வலியே  !

மாலுமி இழந்த கப்பல் போல நாங்கள்
மட்டற்ற கவிஞரை இழந்து தவிக்கிறோம் !

வாலிப வாலி என்பது உண்மை !
வாலிபக்கவியை எண்பது கடந்தும் எழுதியவர் !

புதியவானம் புதிய பூமி என்று எழுதி !
புத்துணர்வை விதைத்தவர் வாலி !

'ஏமாற்றாதே ! ஏமாறாதே !என்று எழுதி !
எமக்கு மனிதநேயம் கற்பித்த வாலி !

கண் போன போக்கிலே கால் போகலாமா ?
காளையரை நெறிப் படுத்திய  வாலி !

தரை மேல் பிறக்க வைத்தான் என்று எழுதி !
துயரில் வாடும் மீனவர்களின் கண்ணீர் பாடிய வாலி !

காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன்  !
காற்றில் பாட்டில் கலந்து என்றும் நின்ற வாலி !

அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் வாலி !
அய்யா பெரியார் பற்றியும் கவி வடித்த வாலி !
---------------------------------------------------------------

படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி !
மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !

ஓவியம் வரையும்  ரங்கராஜன் என்ற பெயரை !
ஓவியர் மாலிபோல வர வாலி என்று வைத்தார் பாபு !
.ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிடடாலும் !
கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி !

திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்தவாலி!
திருவரங்கத்திற்குப்  பெருமைகள் சேர்த்த வாலி !

மயக்கமா! கலக்கமா ! கவியரசு பாடல் கேட்டு வாலி!
மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி !

சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி !
சொக்க வைக்கும் பாடல்களின் ஆசிரியர் வாலி !

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி !
பல்லாண்டுகளாய் திரையில் நிலைத்த நின்ற வாலி !

வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி !
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம் .ஜி .ஆர் !

உன் பெயர் பெயர் இடம் பெறாது என்றதும் வாலி !
உலகம் சுற்றும் பன் என்று பெயர் மாற்றவேண்டும் !

உங்களுக்குச் சம்மதமா என்று கேட்ட வாலி !
உடன் சிரித்து  ரசித்த உயர்ந்த மனிதர் எம் .ஜி .ஆர் .!

எம் .ஜி .ஆருக்கு நான் ஆணையிட்டால் என்று  எழுதி!
எம் .ஜி.ஆரை ஆணையிடும் பதவிக்கு வர வைத்த வாலி!

மல்லிகை என் மன்னன  மயங்கும் என்று  எழுதி !
மதுரை மல்லிக்கு மங்காப் புகழ் சேர்த்த வாலி !

தனி ஈழத்திற்காகவும் கவிதைகள் வடித்த வாலி !
தனிக் கவிதைகளிலும் முத்திரைப் பதித்த வாலி !

பாடல் கவிதை கதை கட்டுரை வடித்த  கவிஞர் வாலி !
படைப்புகளில் என்றும் வாழ்வார் மரணம் இல்லை !

ஓய்வறியா உழைப்பாளி உரத்த சிந்தனையாளர் வாலி !
ஒப்பற்ற கவிதைளை வடித்துத்  தந்தவர் வாலி !

கவியரங்கங்களில்  தலைமை வகித்தவர் வாலி !
கை தட்டல்களைப் பரிசாகப்  பெற்றவர் வாலி !

கண்ணதாசனை தாடி இல்லா தாகூர் என்றார் வாலி !
கற்பனைக் கவியால் தாடி உள்ள  தாகூர் ஆனார் வாலி !

கண்ணதாசனை  மீசை இல்லா பாரதி என்றார் வாலி !
கற்க்கண்டுக் கவியால் மீசை உள்ள பாரதியானார்வாலி!

படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி !
மரணம் இல்லை ! மரணம் இல்லை ! மரணம் இல்லை !

கருத்துகள்