ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !


உயிருள்ள 
வண்ண விமானம் 
வண்ணத்துப் பூச்சி ! 

தெரியவில்லை 
தாலாட்டுப்பாட்டு 
இன்றைய அம்மாவிற்கு ! 

பாறைகளுக்கு வைத்த வெடிகள் 
பழி வாங்கியது 
குவாரி அதிபர்களை ! 

வழிபாட்டிற்கு பயன்பட்டும் 
மகிழவில்லை 
மலர்கள் ! 

மின்தடை நீக்கிட 
ஒரே வழி 
சூரிய ஒளியே வழி ! 

யானைகளுக்கு 
புத்துணர்வு சரி 
மனிதர்களுக்கு ? 

வண்ணங்களில் 
எண்ணங்கள் 
ஓவியம் ! 

பறவைகள் 
விட்ட விதைகள் 
விருட்ச்சங்கள் ! 

சாதி மாறி 
காதல் 
உயிர்கள் பலி ! 

என்றும் இனிக்கும் 
தேனிலவு 
புகைப்படங்கள் !

கருத்துகள்