பிரதமருக்கு திவ்யா எழுதிய கடிதத்தில் உள்ள விஷயங்கள் டிவிட்டர், ஃபேஸ்புக்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சமூக வலைதளங்கள் எதிலும் திவ்யா இல்லை என்பதுதான் ஆச்சர்யம். மேலும், அவரிடம் ஸ்மார்ட்போன்கூட இல்லை...பிரதமருக்கு திவ்யா எழுதிய கடிதத்தில் உள்ள விஷயங்கள் டிவிட்டர், ஃபேஸ்புக்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சமூக வலைதளங்கள் எதிலும் திவ்யா இல்லை என்பதுதான் ஆச்சர்யம். மேலும், அவரிடம் ஸ்மார்ட்போன்கூட இல்லை...நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சென்னை தனியார் மருத்துவமனையில் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரை அமெரிக்க மருந்து நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் சமீபத்தில் சந்தித்தனர். ‘உங்களிடம் ஆலோசனை கேட்க வருபவர்களிடம் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை பரிந்துரை செய்யுங்கள்’ என்று கூறி மாதிரிக்காக சில மருந்துகளை கொடுத்துள்ளனர். அந்த மருந்துகளில் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் ஸ்டீராய்ட்ஸ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா அவற்றை வாங்க மறுத்துள்ளார்.

அப்போது அவர்கள், ‘இந்த மருந்துகளை பரிந்துரைத்தால் உங்களுக்கு லஞ்சமாக அதிகப்படியான தொகை கொடுக்கிறோம்’ என்று கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த திவ்யா அவர்களை உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளார். உடனே இந்தியாவில் தங்களுக்கு மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு இருப்பதாகக் கூறிய அந்த அமெரிக்கர்கள், இந்திய மருத்துவர்கள் பற்றி தவறாக பேசிவிட்டு வெளியேறியுள்ளனர்.  Advertisement

திவ்யா சத்யராஜ்

இந்த சம்பவத்தை மையமாக வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு திவ்யா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் இந்திய மருத்துவத்துறையையில் படிந்துள்ள அலட்சியம், ஊழல் உள்ளிட்ட கறைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு திவ்யா எழுதிய கடிதத்தில் உள்ள விஷயங்கள் டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சமூக வலைதளங்கள் எதிலும் திவ்யா இல்லை என்பதுதான் ஆச்சர்யம். மேலும், அவரிடம் ஸ்மார்ட்போன்கூட இல்லை. அதனால் அவர் வாட்ஸ்அப் உபயோகிப்பதும் இல்லை.

திவ்யா சத்யராஜ்

இதுகுறித்து திவ்யாவிடம் பேசினேன்.

‘‘ஆமாம், ஃபேஸ்புக், டிவிட்டர்னு எந்த சமூக வலைதளங்கள்லயும் நான் இல்லை. என்கிட்ட ஸ்மார்ட்போன்கூட கிடையாது. நோக்கியா சி5 சொல்போன் வைத்துள்ளேன். அதுவும் சிட்டியில் கிடைக்காம சௌகார்பேட்டை போய் தேடிப்பிடித்து வாங்கினேன். ‘வாட்ஸ்அப், ஃபேஸ்புக் இல்லாம எப்படி நண்பர்களை தொடர்பு கொள்ள முடியும்’னு கேட்கலாம். இது எதுவும் இல்லாம இருக்கிறதாலதான் என் நட்பு வட்டம் நாளுக்குநாள் பெருகுதுனு சொல்வேன். ஃப்ரெண்ட்ஸ் நாங்க அடிக்கடி நேர்ல சந்திப்போம். தேவையெனில் போனிலும் பேசிப்போம்.

ஆனால் ‘ஸ்மார்ட்போன் வாங்கு’னு வீட்ல திட்டிட்டே இருக்காங்க. அப்பா புதுப் படங்கள்ல புது கெட்டப்ல நடிக்கும்போது அதுக்காக மேக்கப்போட்டு எடுக்கும் போட்டோக்களை எனக்கு அனுப்பி, ‘எப்படி இருக்கு’னு கேக்கணும்னு நினைப்பார். எனக்கு வாட்ஸ்அப் இல்லாததால நான் பாக்குறதுக்காக அம்மாவுக்கு அனுப்புவார். ஆனால் நான் ஈவினிங் வந்து பார்க்கிறதுக்குள்ள அங்க அப்பாவின் ஷூட்டிங்கே முடிஞ்சிருக்கும். இந்த ஒரு விஷயத்தை மிஸ் பண்றதைத் தவிர மத்தபடி சந்தோஷமா இருக்கேன்.

திவ்யா சத்யராஜ்

எங்க பாட்டி அதாவது அப்பாவோட அம்மா ஃபேஸ்புக்ல இருக்காங்க. வாட்ஸ்அப் பயன்படுத்துறாங்க. அவங்க எங்கேயாவது போகும்போது ஜிமிக்கி, தோடுனு நகைகளை பார்த்துட்டா எனக்கு வாங்கித்தரணும்னு விரும்புவாங்க. ‘அதை போட்டோ எடுத்து உனக்கு அனுப்பி ஓகேவா இல்லையானு பார்த்து சொல்றதுக்காகவாவது ஒரு ஸ்மார்ட்போன் வாங்கக்கூடாதா’னு கேட்பாங்க. நான் ஸ்மார்ட்போன் வாங்காம இருக்கிறதுக்கு இதுக்கூட ஒரு காரணமா இருக்கலாம். ஏன்னா எனக்கு நகைகளே பிடிக்காது. ஸ்மார்ட்போன் வாங்காம இருக்கிறதுக்கான வேறொரு காரணம்னு கேட்டால் எதுக்கெடுத்தாலும் எடுக்கிற செல்ஃபியை சொல்லுவேன்.

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அறிவை மேம்படுத்துறதுக்கு பதிலா நம்மை சோம்பேறியாக்கி, நம் அறிவை கொஞ்சம் கொஞ்சமா மழுங்கடிச்சிட்டு வருதோனு சந்தேகமா இருக்கு. அதனால ஸ்மார்ட் போன் இல்லாம இப்படி இருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு’’ என்கிறார் திவ்யா.

கருத்துகள்